(Reading time: 10 - 20 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

“என்ன?” என்பதாய் சஞ்சய் புருவத்தை உயர்த்தினான்.

“நம்ம குடும்பமும் பிருந்தா குடும்பமும் சேர்ந்து ஷாப்பிங் போறோம் . . இவங்க ரெண்டுபேரும் மீட் பண்ணட்டும்”

“ம்கூம் கைலாசாக்கு போயி நித்யானந்தாவை பாக்க போற மாதிரி பிளான் போடறாங்க . .” மனதில் தனுஷ் சிரித்துக் கொண்டாலும் . . பிருந்தாவை சந்திக்க போகிறோம் என்னும் எண்ணமே சிலிர்த்தது.

அதன் பிறகு பிருந்தா ஒரு முறை போன் செய்தாள் அவ்வளவே பிறகு இருவருக்கும் பேச நேரம் இல்லை.

நல்ல நாளாய் பார்த்து நிச்சயதார்த்த புடவை வாங்க இரு குடும்பமும் சென்றது.

தனுஷ் குடும்பம் முன்னமே கடைக்கு சென்றுவிட்டது. அடுத்து பத்து நிமிடம் கழித்து பிருந்தா குடும்பம் வந்து சேர்ந்தது.

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” என பிருந்தா அண்ணன் மூர்த்தி தாத்தாவின் கை குலுக்கியபடி கேட்டான்.

“இல்லப்பா இப்போதான் வந்தோம்” என்றார் தாத்தா. ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தனர்.

“பிருந்தா உனக்கு பிடிச்ச புடவையா எடுத்துக்கோ” என பாட்டி அவளிடம் கூறிக்கொண்டே “தனுஷ் பிருந்தாக்கு ஹெல்ப் பண்ணு” என்றார்.

பாட்டி வெளிப்படையாக இவ்வாறு கூறியது தனுஷ் பிருந்தா இருவருக்கும் தர்மசங்கடமாய் போனது. “பாட்டி வீட்டுக்கு வாங்க இருக்கு உங்களுக்கு” என மனதில் கருவினான் தனுஷ் . அவன் மனதை புரிந்துகொண்ட பாட்டி “போட என் அனுபவம் என்ன?” என நக்கலாக லுக் விட்டு அகன்றார்.

அனைவரும் தங்களையே பார்ப்பதை உணர்ந்த பிருந்தாவிற்கு வெட்கம் மேலோங்க சட்டென “ அங்க டிசைன் நல்லா இருக்கு பார்க்கலாம் ” என தனுஷை அழைத்து வேகமாக நகர்ந்தாள்.

பிருந்தாவிற்கு இந்த சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. தனுஷிடம் சிரித்து பேச ஆசைதான் ஆனால் அனைவர் முன்னும் செய்ய இயலாது எதோ ஒன்று தடுத்தது. வெட்க புன்னகையுடன் அவனுடன் நடப்பதே ஆனந்தமாய் உணர்ந்தாள்.

கடையின் சிப்பந்தி “வணக்கம் மேடம்” என வணங்க . . பதிலுக்கு பிருந்தாவும் புன்னகைத்தாள்.

“உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?” தனுஷை கேட்டாள்

அவனுக்கு குறிப்பிட்டு எதுவும் பிடித்த வண்ணம் இல்லை ஆதலால் “ப்ளூ” என சொல்லி வைத்தான். அலுவலகத்திற்கு அதிகம் ப்ளூ பயன்படுத்துவான். பார்மல் கலர் என்பதால்.

“ம்ம் சரி ப்ளூல எது? - ஸ்கை ப்ளூ, இங்க் ப்ளூ, எம்.எஸ்.ப்ளூ, பேபி ப்ளூ, இண்டிகோ, நேவி ப்ளூ அவள் சொல்லிக்கொண்டே போக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.