(Reading time: 10 - 20 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

அவனுக்கு தெரிந்ததெல்லாம் ப்ளூ மட்டுமே, ப்ளூவில் இத்தனை வகை உள்ளதென்று முதல்முறையாக வாழ்க்கையில் கேள்விப்படுகிறான். அதிலும் சில பெயர்கள் “பேபி ப்ளூவா? ப்ளூ எப்படா குட்டி போட்டுச்சு? அடுத்து எம்.எஸ்.ப்ளூ . . ப்ளூக்கு இனிஷியல் வேறயா? இப்பவே கண்ணை கட்டுதே” மைண்ட்வாய்ஸ் கதறியது.

“உங்களுக்கு பிடிக்கலயா?” அவன் மௌனமாக இருந்ததால் கேட்டாள்.

“ப்ளூல டிசைன் நல்லா இல்ல . . வேற பாக்கலாமா?” இனி வாழ்க்கையில் ப்ளூ வேண்டாம் என்ற முடிவுடன் கட்சி தாவல் சட்டத்தை மீறினான்.

“எனக்கும் அப்படிதான் தோணுது” என்றாள்

“அப்பாடா . . . தப்பிச்சேன்” மைண்ட்வாய்ஸ் சொல்ல “அந்த டார்க் ரெட் கலர் நல்ல இருக்கு” என்றான் மற்றொரு புடவையை குறிப்பிட்டு.

“சார் அது பர்பிள்” சிப்பந்தி திருத்தினான்.

“வாவ் கலர் நல்லா இருக்கு டிசைனும் செம்ம” என்றாள் பிருந்தா அதை பிரித்து பார்த்தபடி

“ பேக் பண்ணிடலாமா மேடம் ?” சிப்பந்தி கேட்க

“சரி” என்றாள்

“டிசைன் ஓல்ட் மாடல் மாதிரி இல்லையா?” பாட்டி இடைப்புக கூடவே அவனின் அம்மா மற்றும் பிருந்தா வீட்டு பெண்களும் சேர்ந்து கொண்டனர்.

“ஷாப்பிங் முடிந்து கிளம்பலாம்” என எண்ணியவன் கோட்டை தகர்ந்தது.

“நிதானமா பாரு பிருந்தா அவசரமே இல்ல” பாட்டி புடவைகளை பார்த்தபடி சொன்னார்.

அதற்குள் சௌமி “பிஸ்தா மெரூன் பாட்டில்க்ரீன்” என புதுப்புது நிறத்தை சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

தனுஷ் நழுவி தம்பியிடம் அடைக்கலம் புகுந்தான்.

தனுஷ் நிலையை கண்டு சஞ்சய் அடக்க முயன்றும் முடியாமல் சிரித்துவிட்டான். “கிண்டல் பண்ணாதடா” என தனுஷ் அலுத்துக்கொள்ள “சரி விடு ப்ரோ . . பிசினஸ்ல புலி . . இதுல . .” என முடிக்கும் முன் அவனுக்கு செல்ல அடி விழுந்தது.

பின்னர் இருவரும் தாத்தா, அப்பா, பிருந்தா அண்ணன் மூர்த்தி மூவருடன் சேர்த்துக் கொண்டனர். ஐவரும் பேசியபடி இருந்தனர்.

“ தாத்தா கல்யாணத்த சிம்பிள்ல முடிக்கலாம் . . தண்ட செலவு வேண்டாம்” தனுஷ் சொல்ல

“தனுஷ் சொல்றது சரிதான் தாத்தா . . ” சஞ்சய் எசபாட்டு பாடினான்.

தாத்தாவும் தனுஷ் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் “உலகத்துல இனி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.