தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 11 - ஜெய்
மாநில அளவில் நடைபெறும் போட்டியென்றாலும். இந்த போட்டியில் அபாரமாக விளையாடும் வீராங்கனைக்கு பெரும்பாலும் அடுத்து நடைபெறவிருக்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட கண்டிப்பாக வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்... அதனாலேயே இந்த போட்டி முக்கியமானதாக கருதப்பட்டது....
மைத்தியின் அகாடமியிலிருந்து ரமாவைத் தவிர மற்ற நான்கு பெண்களும் தேர்வாகியிருந்தனர்...
மைத்தி விளையாடும் அகாடெமிக்கு சென்னையிலேயே நான்கு கிளைகள் இருந்தன... எல்லா கிளைகளிலிருந்தும் மொத்தமாக இருவது வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர்.... மொத்தம் எட்டு அணிகள் போட்டியிட்டன... இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன....
மிக முக்கியமான போட்டியாகையால் மைத்தியின் கோச் அவர்கள் நால்வரையும் மிகச் சிறந்த முறையில் தயார் செய்திருந்தார்... நால்வருக்கும் காலை, மாலை இரு வேளையும் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது...
மைத்தியும், துளசியும் ஏற்கனவே திறமையாக ஆடக்கூடியவர்கள்... அவர்களின் பயிற்சியாளரின் கடும் பயிற்சியால் இன்னும் மிகச் சிறப்பாக விளையாடினர்....
போட்டி அன்று காலை ஆட்டம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன் அன்று ஆட இருப்பவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.... வழக்கம்போல் இம்முறையும் துளசியும், மைத்தியும் அந்த பட்டியலில் இல்லை... இவர்கள் கிளையிலிருந்து லக்ஷ்மி மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தாள்... அதுவும் மாற்று ஆட்டக்காரியாக (சப்டிடியூட்).... இருவருமே அதை கேட்டதும் மனமுடைந்து போனார்கள்... அதுவும் ஆடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நான்கைந்து பேர் இதற்கு முன் எந்த போட்டியிலும் பெரிதாக விளையாடி இருக்கவில்லை.... மைத்தியின் பயிற்சியாளர் மிகுந்த கோபத்துடன் வீராங்கனைகளை தேர்ந்தெடுத்த குழுவினரை சந்திக்க சென்றார்....
“வாங்க பாஸ்கர் சார்.... என்ன ஒரே டென்ஷனா இருக்கீங்க...”
“சார் என்ன சார் செலெக்ஷன் இது.... நல்லா விளையாடற பசங்களை விட்டுட்டு இப்படி புது ஆளுங்களா செலக்ட் பண்ணி வச்சிருக்கீங்க...”
“சரியாத்தான் பண்ணி இருக்கோம் பாஸ்கர்.... அவங்க புது ஆள் எல்லாம் இல்லை... ஏற்கனவே நிறைய மேட்ச் லோக்கலா விளையாடி இருக்காங்க....”
“ஏன் சார் .... இது எத்தனை முக்கியமான மேட்ச் அப்படின்னு தெரியும் இல்லை.... அதுல போய் செலெக்ஷன் இப்படி பண்ணி இருக்கீங்க.... அதுவும் எங்க கிளைல நல்லா விளையாடற ரெண்டு பசங்களையும் விட்டுட்டீங்க... எடுத்த லக்ஷ்மியையும் எக்ஸ்ட்ரா பிளேயரா போட்டு