(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

வாங்கப் போறியா....”

“புதுசுதான் வாங்க போறோம்... ஆனா நேக்கு இல்லை... நோக்குதான்...”

“நேக்கெதுக்கு ரகுண்ணா... என்னோட செருப்பு நன்னாத்தான் இருக்கு...”

“சுப் பேசாம வா...”, அவள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு கடையின் உள் சென்றான் ரகு...

மைத்தி எப்பொழுதும் போல் அங்கிருக்கும் சான்டக் வகை செருப்புகளை பார்க்க ஆரம்பித்தாள்... நிறைய இடங்கள் நடந்து செல்வதால் நீண்ட காலம் உழைக்கும் என்று அனந்து எப்பொழுதும் அந்த வகை செருப்புகளையே வாங்குவார்.... எனவே அவள் அதை பார்த்துக்கொண்டிருக்க ரகு அவளை அழைத்து சென்று ஒரு நாற்காலியில் அமர வைத்து கடையில் வேலை செய்யும் பையனிடம் மைத்தியின் கால் அளவிற்கு ஷூ எடுத்து காட்டுமாறு கூறினான்...

கடைப்பையனும் முதலில் சாதாரண வெள்ளை ஷூக்களை கொண்டு வந்து காட்டினான்... அதற்குள் கடையை ஒரு சுற்று சுற்றிய ரகு அவளின் கால் அளவிற்கு ஏற்றாற்போல் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஷூவை எடுத்து வந்து போட்டு விட்டான்...

“அச்சோ ரகுண்ணா.... இது Power ஷூஸ்.... பயங்கர வெலையா இருக்கும்... இது வேண்டாம்...”

“எதுவும் பேசப்படாது மைத்தி... உனக்கு பிடிச்சிருக்கா... போட்டுண்டா சௌகர்யமா இருக்கான்னு மட்டும் பாரு....”

“ரகுண்ணா இது வேண்டாமே... உன்னோட ஒரு மாச இன்ஸ்டிட்யூட் சம்பளமே காலி ஆயிடும்... நான் மொதல்ல அந்த அண்ணா காமிச்சாளே என்பது ரூபாய்க்கு அதையே எடுத்துக்கறேன்...”

“எதுவும் பேசக்கூடாதுன்னு சொன்னேனே மைத்தி.... ஷூவை போட்டுண்டு நடந்து பாரு...”, ரகு சொல்ல, அடுத்த அரை மணியில் மைத்தியின் அளவிற்கு பொருத்தமான ஷூவை வாங்கிக்கொண்டு வந்தனர்...

வீட்டிற்கு வந்து அனைவரிடமும் பெருமையாக மைத்தி காட்ட, ஒரு காலணியில் எதற்கு இத்தனை பணத்தை போட்டான் இதற்கு அரை பவுன் தங்கம் வாங்கி இருக்கலாமே என்று கற்பகம் பாட்டி அங்கலாய்த்து போனார்....

“தங்கத்தை விட மைத்திக்கு இப்போ இதுதான் முக்கியம் பாட்டி... எப்பவுமே விளயாடரவாளுக்கு ஷூ சரியா இருக்கறது ரொம்ப முக்கியம்.... மைத்தி இனிமே இதையே எப்பவும் விளையாட போகும்போது போட்டுக்கோ....”, ரகு சொல்ல மைத்தி தலையாட்டினாள்...

கடைசி போட்டியில் இவர்களின் ஆட்டத்தால் வென்றபின் அகாடமியிலும் மைத்தி மற்றும் துளசியின் பெயர்கள் சற்று உரக்க ஒலிக்க ஆரம்பித்து இருந்தது... அடுத்த வந்த மாவட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.