(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

வச்சுருக்கீங்க...”

“பாஸ்கர் சார் எல்லாருக்குமே அவங்கவங்க கிளைல இருக்கற எல்லாரையுமே விளையாட வைக்கணும்ன்னு ஆசை இருக்கத்தான் செய்யும்... அதுக்குன்னு இருவது பேரையுமா விளையாட வைக்க முடியும்... உங்க டீம்ல லக்ஷ்மி மட்டும்தான் எக்ஸ்பீரியன்ஸ் பிளேயர்.... அதுதான் அவங்களை தேர்ந்தெடுத்தோம்....”

“சார் விளையாட்டுல உங்க அரசியல காட்டாதீங்க சார்.... லக்ஷ்மியை விட துளசி நல்லா விளையாடுவா.... போன மேட்ச்ல கூட அவ எடுத்த ரன் உங்களுக்கு தெரியும்... “

“என்ன பாஸ்கர் சார் இது.... உங்க டீம் பிளேயரை நீங்களே குறைச்சு பேசலாமா....”

“குறைச்சு பேசலை சார் யார்கிட்ட அதிக திறமை இருக்குன்னு சொல்றேன்... கவாஸ்கர் நல்லா விளையாடுறார்ன்னா வெங்சர்க்கார் விளையாட மாட்டார்ன்னு அர்த்தமா.... இவரை விட அவர் ஒரு படி மேல விளையாடுவார்ன்னு அர்த்தம்.... சரி அதை விடுங்க..... கடந்த ஒரு வருடமா துளசியும், மைத்தியும்தான் நம்ம அகாடமில பாட்டிங், பௌலிங் ரெண்டுத்துலயும் முதல் இடத்துல இருக்காங்க.... ஆனா அவங்க இந்த மேட்ச்ல இல்லை... உங்களுக்கே இது அபத்தமா தெரியலையா...”

“பாஸ்கர் சார்... இது எவ்ளோ முக்கியமாக மேட்ச்சுன்னு உங்களுக்கே தெரியும்... இதுல எக்ஸ்பீரியன்ஸ்தான் பேசும்.... அவங்க ரெண்டு பேருமே சின்ன பசங்க.... இப்பத்தான் ஒரு வருடமா விளையாட ஆரம்பிச்சு இருக்காங்க.....”

“சார் வயசை பார்க்காதீங்க... அவங்க திறமையை பாருங்க.... அப்படியே இருந்தாலும் நீங்க செலக்ட் பண்ணி இருக்கறவங்களுக்கு என்ன எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு.... அதுல சில பேர் எந்த பெரிய மாட்ச்சும் விளையாடினது இல்லையே....”

“பாஸ்கர் சார் , தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாருமே திறமை வாய்ந்தவங்க... அவங்களோட முந்தைய ரெகார்ட்ஸ் பார்த்துட்டுதான் செலக்ட் பண்ணி இருக்கோம்... அதனால எந்த வாக்குவாதமும் பண்ணாம போய் விளையாட்டை பாருங்க....”, பாஸ்கர் எத்தனை எடுத்துக்கூறியும் செலெக்ஷன் கமிட்டியினர் கேட்பதாக இல்லை... மிகுந்த மனவருத்தத்துடன் அறையை விட்டு வெளியில் வந்தார் பாஸ்கர்...

“என்ன சார்... ஒண்ணும் வேலைக்காகலையா... இவனுங்க கிட்ட எல்லாம் பேசி ஒரு பயனும் இல்லை சார்....”

“ப்ச் பாவம் முரளி சார்... நல்லா விளையாடற பசங்க... மனசொடிஞ்சு போய்டுவாங்க....”

“எல்லாம் பணம் பாஸ்கர் சார்.... நான் சொல்றதை வெளிய யார் கிட்டயும் சொல்லாதீங்க.... அவங்க நாலு பேரும் அகாடமிக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்திருக்காங்க... அதுவும் தவிர செலெக்ஷன் கமிட்டி ஆட்களை செமித்தியா கவனிச்சிருக்காங்க.... ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.