(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

கோவத்துடன் அடுத்து பாஸ்கர் தங்கள் தலைமையுடன் பேச சென்றார்.... அவரிடம் அத்தனை ரெகார்ட்டுகளையும் சமர்ப்பித்து செலெக்ஷன் கமிட்டியின் தவறை சுட்டிக் காட்டினார்... படு மோசமான ஆட்டத்தால் ஏற்கனவே கோவத்தில் இருந்த தலைமை அடுத்த போட்டிக்கு மிக அதிகத் திறமையுள்ள வீராங்கனைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்து, அந்தந்த கிளையின் பயிற்சியாளரையே தேர்ந்தெடுக்கும் குழுவில் போட்டார்.....

தலைமையின் சரியான முடிவால் அடுத்த போட்டிக்கு மைத்தி, துளசி இருவருமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.... மேலும் பயிற்சியாளர்களின் நேர்மையான தேர்ந்தெடுப்பாள் நன்றாக விளையாடக் கூடிய வீராங்கனைகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்... அவர்களின் ஆட்டமும் களைகட்டியது.... எதிரணியினர் மைத்தியின் புது வித பந்து வீச்சில் திணறினர்... அதே போல் துளசியின் அதிரடி மட்டையடிப்பும் அமர்க்களமாக இருந்தது... இருவரின் அபாரமான ஆட்டத்தால் அடுத்து வந்த அனைத்து போட்டிகளிலும் இவர்கள் அணி வெற்றிபெற்றது.... இறுதி போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்றினர்....

துளசியும், மைத்தியும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்... அவர்கள் முதன்முறையாக விளையாடும் மிகப்பெரிய போட்டி... துளசி ஆட்ட நாயகியாகவும், மைத்தி தொடர் நாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.... அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி....

மிகுந்த ஆனந்தத்துடன் மைத்தி வீடு வந்து சேர்ந்தாள்....

“சந்தோஷமாடா குட்டி.... விளையாடின முதல் பெரிய போட்டியிலேயே பரிசு வாங்கிண்டு வந்துட்ட...”

“செம்ம ஹாப்பி ரகுண்ணா.... கோச்சுக்கும் பயங்கர சந்தோஷம்... இதே மாதிரி நன்னா விளையாடினா கண்டிப்பா தமிழ்நாடு ரஞ்சி டீம்ல செலக்ட் ஆகா நிறைய வாய்ப்பிருக்குன்னு சொன்னார்....”

“கண்டிப்பா விளையாடுவேடா குட்டி.... சரி போய் சீக்கிரம் டிரஸ் மாத்திண்டு வா... நாம ஒரு இடத்துக்கு போப்போறோம்....”

“எங்க ரகுண்ணா....”

“அது சஸ்பென்ஸ்.... ஓடு... ஓடு... சீக்கிரம் வா....”, ரகு அவசரப்படுத்த, அடுத்த அரைமணியில், மைத்தி ரகுவின் சைக்கிளில் அமர்ந்திருந்தாள்....

“ரகுண்ணா இப்போவானும் சொல்லு.... எங்க போறோம்....”

“இன்னும் கொஞ்ச நேரம் சஸ்பென்ஸ்லையே இரு... பக்கத்துல வந்துட்டோம்...”, ரகு பேசியபடியே மயிலாப்பூர் Bata வாசலில் தன் சைக்கிளை நிறுத்தினான்...

“ரகுண்ணா எதுக்கு இங்க வந்திருக்கோம்... உன்னோட செருப்பு அறுந்து போச்சா... புதுசு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.