(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

பொண்ணு சொந்தக்கார பொண்ணு... அப்போ அவங்களைத்தானே தேர்ந்தெடுப்பாங்க....”

“என்ன முரளி சார் இது... பணமா வந்து விளையாடப்போகுது... இந்த மேட்ச், விளையாட்டு வீரர்களுக்கு ஒரு திருப்பு முனை... இந்திய அளவு போகக்கூட வாய்ப்பிருக்கு... இதுல போய் லஞ்ச லாவண்யத்தை காட்டறாங்களே.... மனசாட்சியே இல்லாத ஜென்மங்க...”

“நம்ம நாட்டுல இதெல்லாம் சர்வ சகஜம் பாஸ்கர் சார்... புதுசா நடக்கறா மாதிரி வருத்தப்படறீங்க.... எப்படியும் இந்த சொத்தைங்களை வச்சு ஆடுனா இன்னைக்கு மாட்ச் ஜெய்ச்சா மாதிரிதான்.... எனக்கு இப்போவே முடிவு பிரகாசமா தெரியுது...”

முரளி சொன்னது போலவே ஆனது.... ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட சொதப்பல்கள்... முதலில் இவர்கள் அகாடமி பீல்டிங் செய்ய, எதிரணி ஆடியது... சொதப்பலான பந்து வீச்சால் ஏகப்பட்ட ரன்களை வாரி வழங்கினார்கள்... பந்து தடுக்கும் முறையும் மிக சாதாரணமாக இருந்தது.... இதில் நிறைய கேட்ச்களை வேறு கோட்டை விட்டார்கள்.... ஒரு நாள் போட்டியில் நூற்றியைம்பது ரன் எடுப்பதே மிக அதிகம்... இவர்களின் அபாரமான பந்து வீச்சால் எதிரணி இருநூற்றி இருபது ரன்கள் எடுத்தார்கள்... அடுத்து ஆட வந்தபோதும் எதிரணியின் திறமையான பந்து வீச்சால் மிகக் குறைந்த ரன்களே இவர்களால் எடுக்க முடிந்தது.... கிட்டத்தட்ட நூறு ரன் வித்தியாசத்தில் எதிரணி வெற்றி பெற்றது....

அதிக பட்ச கோவத்துடன் பாஸ்கர் செலெக்ஷன் கமிட்டியை சந்திக்க சென்றார்....

“என்ன சார் உங்க திறமையான வீராங்கனைகள் என்ன ஆனாங்க... யாராவது சூனியம் வச்சுட்டாங்களா... ஆடவே இல்லை.....”

“பாஸ்கர் சார்.... கண்டபடி பேசாதீங்க... எல்லா டீமுக்குமே மோசமான நாள்ன்னு ஒண்ணு இருக்கும்... இன்னைக்கு நமக்கு அந்த நாள்..... அடுத்த மேட்ச்ல பாருங்க, எப்படி ஜெய்க்க போறாங்கன்னு....”

“ஓ அடுத்த மேட்ச்ல வேற இதே டீம் விளையாட வைக்கிற ஐடியால இருக்கீங்களா... ரொம்ப பிரமாதம்.... அதுக்கு எவ்ளோ காசு வாங்கினீங்க... இல்லை மொத்தமா விலை பேசிட்டீங்களா....”

“பாஸ்கர் சார், ரொம்ப பேசாதீங்க... நாங்கதான் செலெக்ஷன் கமிட்டி... நாங்க சொல்றததான் நீங்க கேட்டாகணும்.... தேவையில்லாம பேசி அநாவசியமா உங்க பதவியை இழக்காதீங்க....”

“ஓ மிரட்டல்... இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.... அடுத்த மேட்ச் திறமையான வீராங்கனைகள் மட்டும்தான் விளையாடுவாங்க... அதுக்கு என்ன பண்ணணுமோ அதை நான் பண்ணுவேன்... பார்த்துட்டே இருங்க....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.