வார்த்தையையும் அழுத்தி சொல்ல, மெளனமாக தலையை ஆட்டினாள் தமிழ்செல்வி.
"அன்னைக்கு ஏதோ கோபத்துல அப்படி நடந்துடுச்சு அதுக்காக நான் எதோ உன்னை பாக்கும்போதெல்லாம் கிஸ் பண்ண போற மாதிரி பிஹேவ் பண்ற. நீ ரொம்ப அதிகமா யோசிக்கிறேன்னு நெனைக்கிறேன். அந்த அளவுக்கு உன் மேல எனக்கு ஆசை எல்லாம் ஒண்ணும் கிடையாது. அதே மாதிரி உன்கூட கண்ணாமூச்சி விளையாட எல்லாம் எனக்கு டைம் கிடையாது. சோ உன் கண்ணாமூச்சி விளையாட்டை இதோட நிறுத்திக்கோ" என்றவன் அந்த அறையை விட்டு வெளியேறவும் தான் தமிழுக்கு மூச்சே வந்தது.
படபடவென அடிக்கும் இதயத்தின் துடிப்பு அவளுக்கு கேட்பதை போல இருந்தது. காய்ச்சல் வந்தது போல முகம் எல்லாம் சூடாகி போனது.
"சே...என்னாச்சு எனக்கு??? ஏதாவது திட்டுனா கூட சண்டை போட்ருவேன். ஆனா ஏன் என்னால எதுவுமே பேசமுடியல. கோபத்துல நடந்துடுச்சுனு சொல்றவரை ஒரு வார்த்தை திரும்ப கேட்டியா தமிழ்???" என தன்னை தானே திட்டி கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது கதவை திறந்து கொண்டு வந்த கீர்த்தியின் குரல்.
"மேம், சார்கிட்ட ப்ரொபசல்ஸ் கொடுத்துட்டு அப்படியே அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல அதோட காப்பியை கொடுத்துட்டேன்." என்றபடி வந்தவள் தமிழின் முகத்தை பார்த்து பேசுவதை நிறுத்திவிட்டு அவள் அருகே சென்றாள்.
"தமிழ், உனக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா??? பீவரா? ஏன் முகம் எல்லாம் சிவந்து இருக்கு?" என்றபடி தன்னுடைய கையை அவளின் நெற்றியில் வைத்து பார்த்தவள், "சூடா இருக்கே...நான் போயி உனக்கு குடிக்க சூடா ஏதாவது கொண்டு வரேன்" என்றபடி நகர்ந்தவளின் கையை பிடித்த தமிழ், "கீர்த்தி, எனக்கு ஒன்னும் இல்லை. நான் நல்லா தான் இருக்கேன்" எனவும் அவளின் முகத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தவள் "ஹான் எனக்கு புரிஞ்சுடுச்சு.. நான் வரும் போது ராம் சார் இந்த ரூம்ல இருந்து வெளிய போனதை பார்த்தேன். என்ன ஆபீஸ்லேயே ரொமான்ஸா??? ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க" என்றபடி சிரித்து கொண்டே அவள் வெளியேற, தன்னுடைய கைப்பையில் இருந்த கண்ணாடியை எடுத்து முகத்தை பார்த்தாள் தமிழ்செல்வி.
"ஆமாம் ஏன் என் முகம் இப்படி சிவந்திருக்கு??? சே சே இந்த கீர்த்திக்கு ஒன்னும் தெரியல. கோபமா இருந்தா கூட முகம் சிவக்கும்" என்றபடி கண்ணாடியை கைப்பைக்குள் வைத்தவள் தன்னுடைய கவனத்தை வேலையில் திருப்பினாள்.
"குட்டிமா ஏண்டா? என்ன கோபம் என் மேல???" என்றபடி இலக்கியாவின் முகத்தை தன்னை நோக்கி திருப்பிய பரத்தின் கையை தட்டி விட்டவள் அவனுக்கு முதுகை காட்டிக்கொண்டு திரும்பி அமர்ந்தாள்.