கூட ஒர்க் பண்றங்க. நம்ம அவங்களுக்கு எல்லாம் ஓவர் டைம் பண்றதுக்கான சம்பளம் தந்தாலும் அவங்களுக்கு அந்த ஒர்கிங் என்விரோன்மெண்ட் கம்பர்ட்டபிளா இருக்கானு சர்வே எடுத்து அந்த சர்வே ரிசல்ட்டை வெச்சு சில ப்ரோபோசல்ஸ் ரெடி பண்ணிருக்கோம். அதை மேனேஜ்மென்ட் மீட்டிங்ல டிஸ்கஸ் பண்ணி ஓகே ஆயிடுச்சுனா அதை எல்லாம் இம்ப்லிமெனட் பண்ணனும்" இதை எல்லாம் சொல்லும் பொது மின்னிய தமிழ் செல்வியின் கண்களை கண்ட விசாலம், அவளை பெருமையுடன் பார்த்தார்.
"எனக்கு தெரியும் செல்வி. நீ கண்டிப்பா ஷைன் பண்ணுவேன்னு. திறமைசாலிகளை எந்த வாய்ப்பு கிடைச்சாலும் அதை முழுமையா பயன்படுத்திக்குவாங்க" என்றவர் "அப்பறம் கூட ஒர்க் பண்றவங்க எல்லாம் எப்படி??" எனவும், "எல்லாரும் நல்லா பிரெண்ட்லியா இருக்காங்க பாட்டி. அதுவும் கீர்த்தின்னு அட்மினிஸ்ட்ரேட்டிவ் டிபார்ட்மென்ட் எக்சிகியூடிவ் ரொம்ப நல்ல டைப். நாங்க ரெண்டு பெரும் சீக்கிரமே பிரெண்ட்ஸ் ஆயிட்டோம்" குழந்தையை போல குதூகலத்துடன் தமிழ்செல்வி சொல்ல, "உன்னை யாருக்கு தான் பிடிக்காது. யாரு தான் உன்னோட பிரென்ட் ஆகமாட்டாங்க?" பாட்டி சிரிக்க தமிழ்செல்வியும் அவருடன் இனைந்து கொண்டாள்.
"ரெண்டு பேரும் கிட்டத்தட்ட நாற்பத்தியைந்து நிமிஷமா சாப்பிடாம பேசிட்டே இருக்கீங்க. சீக்கிரம் சாப்பிடுங்க. லேட்டாச்சு" என ராம் எழுந்து செல்ல, "அவன் கிடக்கறான் சிடுமூஞ்சி. எப்பவும் இப்படி தான். அதான் அசோக்கை தவற அவனுக்கு நல்ல பிரெண்ட்ஸ் யாருமே இல்லை. உனக்கு சீக்கிரம் பிரெண்ட்ஸ் கிடைக்கவும் பொறாமை." பாட்டி கிசுகிசுப்பாக சொல்ல சிரித்த தமிழ்செல்வி, "பாட்டி அசோக் டெய்லி வராறா?" எனவும், "ஹ்ம்ம் டெய்லி வரான். டெய்லி உன்னை பத்தி கேப்பான். நீங்க தான் பத்து மணிக்கு வறதாச்சே...அப்பறம் எப்படி பார்க்கமுடியும்..." பாட்டி சோகமாக சொல்லவும் "ஹ்ம்ம் ஆமாம் பாட்டி புது இடம், கொஞ்சம் அதிக நேரம் செலவழிச்சா தான் சீக்கிரம் எல்லாம் கத்துக்க முடியும்" என்றவள், "பாட்டி அப்பறம் உங்களுக்கு புது கேர் டெக்கர் ஒருத்தரை பார்க்கணும். உங்களுக்கு எந்த மாதிரி ஆள் வேணும்னு சொன்னிங்கன்னா நான் அசோக் கிட்ட பேசி ஏற்பாடு பண்றேன்" என்றாள் தமிழ்செல்வி.
"கேர் டெக்கர் எல்லாம் வேண்டாம் செல்வி. பாக்கியம் இருக்கா பேச்சு துணைக்கு. நானும் நல்லா ஹெல்த்தியா தான் இருக்கேன். உன்னை முதல் முதல்ல பார்த்தப்பவே எனக்கு பிடிச்சுடுச்சு. நீ வேலை இல்லைனு சொன்னதும் உன்னை என் கூடவே வெச்சுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சது. விடுவேனா...அதான் டக்குனு உன்னை என் கேர் டேக்கரா அப்பாய்ண்ட் பண்ணுனேன்" என்ற விசாலத்தின் கழுத்தை கட்டி கொண்ட தமிழ் "தேங்க்ஸ் பாட்டி" எனவும் "இன்னுமா உங்க ரெண்டு பேருடைய கொஞ்சல்ஸ் முடியல. நான் கார்கிட்ட வெயிட் பண்றேன். சீக்கிரம் வா" என ராம் வேகமாக வெளியே செல்ல, "நைட் பாக்கலாம் பாட்டி பை" என்றபடி தன்னுடைய பேகையும் எடுத்து கொண்டு அவன் பின்னால் ஓடினாள் தமிழ்செல்வி.