மேல் படர்ந்தது.
இருவரின் பார்வையும் சிலநொடிகள் சந்தித்து கொள்ள சட்டென தன்னுடைய கையை விலக்கினாள் தமிழ்செல்வி. அவளின் சிவந்த முகத்தை பார்த்த ராம் என்ன நினைத்தானோ, மாற்ற எண்ணிய பாடலை மாற்றாமல் கையை எடுத்தவன் பார்வை மீண்டும் ஒருமுறை அவள் மேல் படிந்து பின் சாலையில் பதிய, அதற்க்கு மேல் அந்த புறம் திரும்பாமல் சாலையை பார்த்தபடி அமர்ந்தாள் தமிழ்செல்வி.
"ராம், உங்களுக்கு இந்த சாங் ரொம்ப பிடிக்கும்ல. உங்களுக்கு ஞாபகம் இருக்கா, நீங்க யுஜி முடிச்சு எம்பிஏக்காக யூஸ் போறதுக்கு முன்னாடி ஒரு கெட் டுகெதர் வெச்சாங்களே உங்க காலேஜ்ல...நான் கூட உங்க கூட வந்தேன். அப்போ இந்த சாங் தான் பாடுனீங்க...எனக்கு இன்னும் அந்த பீல் அப்படியே இருக்கு" நித்யா அவள் பாட்டிற்கு பேசி கொண்டே செல்ல, அவன் எந்த சூழலில் அந்த பாடலை பாடினான் என்ற ஞாபகங்கள் அவனுக்குள் அலை மோதியது.
அவனுடைய முதல் காதல்...அதற்க்கு மேல் அவனுக்கு வேறு யாருடனும் காதல் தோன்றவில்லை. அதனால் அதுவே அவனுடைய கடைசி காதலாக இருக்குமா? கண்டதும் வந்த காதல், ஆனால் அது சொல்லாமலே முடிந்தும் போனது. அந்த மூன்று நாட்கள் அவனின் வாழ்க்கையில் கல்லில் செதுக்கிய சிற்பம் போல அழியாமல் பதிந்து போனது. அவளை அறியாமல் பின் தொடர்ந்த தருணங்கள், அவளின் ஒவ்வொரு அசைவையும் மனதில் சேமித்து அவளின் சிரிப்புகளை பொக்கிஷமாக்கி அவளின் செல்ல சிணுங்கல்களையும் சின்ன சின்ன கோபங்களையும் ரசித்தவனுக்கு அவனின் காதல் அதே வேகத்தில் மரணித்து போகும் என தெரிந்திருக்கவில்லை. இந்த நிமிடம் வரை அந்த நினைவுகள் தான் அவனை அலைக்கழித்து கொண்டிருந்தது. இரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கை அவளை மறக்க செய்யும் என்று எண்ணினான் ஆனால் அது மறக்கடிக்கவில்லை. தவறு என தெரிந்தும் நண்பர்களுடன் பார்ட்டி அது இது என ஊர் சுற்றினான். என்றாவது ஒரு நாள் அவளை மறந்து விடுவோம் என்று. அந்த போதை அப்போதைக்கு மட்டுமே அவளை மறக்கவைத்தது. ஆனால் அவளின் நினைவுகள் அவனின் மனதில் ஆழத்தில் இருந்தது. அதை மறக்க வைக்க யாராலும் எதனாலும் முடியவில்லை. அவனையும் அறியாமல் பெருமூச்சொன்று எழுந்தது.
ஆனால் அவன் ஒன்றை யோசிக்க தவறி இருந்தான். இல்லை இல்லை...அவனுக்கு அது தெரிந்திருந்தும் அதை பற்றி அவன் யோசிக்க விரும்பவில்லை... தமிழை கண்டது முதல் இந்த நிமிடம் வரை அவன் அவனுடைய பழைய நண்பர்கள், பார்ட்டி எல்லாவற்றையும் மறந்துவிட்டான் என்பதை.
தொடரும்
Next episode will be published on 29th Aug. This series is updated weekly on Saturday mornings.
Go to Priyamaanavale story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.