கார் எப்போதும் போல அமைதியாக அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. வழக்கம் போல அந்த காலை நேரத்தில் பரபரப்பாக பள்ளிக்கும் கல்லூரிக்கும் அலுவலகத்திற்கும் படையெடுக்கும் மக்களை வேடிக்கை பார்த்தவாறு வந்தாள் தமிழ்செல்வி.
காரை ஒட்டி கொண்டிருந்த ராமின் மனம் முழுதும் காலையில் பாட்டியும் தமிழும் பேசியதே ஓடிக்கொண்டிருந்தது.
அவருடன் வேலையை பற்றி பேசும்போது மின்னிய அவளுடைய கண்கள், கீர்த்தியை பற்றி பேசும்போது குழந்தை போல குதூகலித்த முகம் இதெல்லாம் அவனை குழப்பிக்கொண்டிருந்தது. பணத்திற்காக ஒருவளால் இப்படி நடிக்கமுடியுமா என்ன? ஆனால் அவன் நேரில் பார்த்தானே, தன்னுடைய காதுகளால் அவள் பேசியதை கேட்டானே...அவள் பேசியதை மறக்கவும் முடியாமல் அவளை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவன் மனம் முழுதும் குழம்பிக்கிடந்தது.
அவனுடைய யோசனையை கலைத்தது பின்னால் இருந்து வந்த நித்யாவின் குரல்.
"ராம் இதென்ன எதுவும் மடமா? இவ்ளோ அமைதியா இருக்கு...எப்பவுமே ரெண்டு பெரும் இப்படி தான் பேசாம ட்ராவல் பண்ணுவிங்களா?? இல்லை....நான் இருக்கறதால அமைதியா இருக்கீங்களா???" அவளின் குரலில் இருந்தது கிண்டலா இல்லை சந்தோசமா என புரியவில்லை தமிழ்செல்விக்கு.
"அதெல்லாம் இல்லை நித்து. நான் ஆபீஸ் ஒர்க் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன். அந்த மாதிரி டைம்ல தமிழ் என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டா...அவ்ளோ தான்.... உனக்கு என்ன வேணும்??? ஏதாவது சாங் பிளே பண்ணவா?" என்றவனை பார்த்த தமிழ்செல்வியின் கண்களில் ஆச்சர்யம் இருந்தது என்றால் அதை கண்ட நித்யாவின் கண்களில் வெறுப்பு இருந்தது.
"ஏதாவது சாங் பிளே பண்ணுங்க..." என்றவள் இருக்கையில் சாய்ந்து அமர, காரில் இருந்த எப்எம்மை ஒலிக்க விட்டான் ராம்.
அது ரெட்ரோ மார்னிங் என்ற அறிவிப்புடன் அடுத்த பாடலை ஒலிக்க விட்டது.
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
பாடலை கேட்ட தமிழ்செல்வியின் முகம் அவளையும் அறியாமல் சிவக்க, வேகமாக அந்த பாடலை மாற்றும் பொருட்டு அவளுடைய கை நீள அதே வேகத்துடன் வந்த ராமின் கை மேல் அவளின் கை