இருக்கணும். அதுக்கு இந்த டிகிரி ரொம்ப முக்கியம்" என்றவனை கண்கள் கலங்க அணைத்து கொண்ட இலக்கியா, "தேங்க்ஸ் பரத். நான் ரொம்பவே லக்கி" எனவும் அவளின் கண்களை துடைத்த பரத் "இவ்ளோ அழகான அன்பான வைப் கிடைக்க நான் தான் லக்கி" என்றபடி அவளை அணைத்து கொண்டான்.
"பாட்டி பரத் சாப்டானா?" என்றபடி டைனிங் டேபிளில் அமர்ந்தான் ராம்.
"அவனும் இலக்கியாவும் சீக்கிரமே சாப்டுட்டு கிளம்பிட்டாங்க. அவன் இலக்கியாவை காலேஜ்ல டிராப் பண்ணிட்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் ஏதோ சப்மிட் பண்ணணுமாம். அதையும் பண்ணிட்டு ஆபீஸ் வராதா சொன்னான்" பாட்டி சொல்லவும் மூவருக்கும் உணவை பரிமாறிவிட்டு அமர்ந்தாள் தமிழ்செல்வி.
அவர்கள் மூவரும் சாப்பிட்டு கொண்டிருக்கையில் கீழே வந்த நித்யாவை கண்ட ராம், "வா நித்து, ரெடியா? சாப்பிட்டதும் கிளம்பலாம் உக்காரு" எனவும் அவன் அருகே இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தவளுக்கு உணவை பரிமாற தமிழ்செல்வி தட்டை எடுத்து வைக்கவும், "எனக்கு பிரேக்பாஸ்ட் வேண்டாம். ஒரு டம்பளர் பால் போதும்" என நித்யா சொல்ல, தன்னுடைய இருக்கையில் இருந்து எழ முயன்ற தமிழ்செல்வியை அமரும்படி சைகை செய்த விசாலம், "நித்யா, இனி ஒரு வருஷம் இங்க இருந்து தான் காலேஜ் போகப்போற. இந்த வருஷம் முழுசும் உனக்கு ஒருத்தர் வேலை செய்ய நீ என்ன இந்த வீட்டு விருந்தாளியா? போ கிச்சன்ல பாக்கியம் இருப்பா. ஒரு டம்பளர் பால் காய்ச்சி கொடுக்க சொல்லு" என சொல்லவும் எதுவும் பேசாமல் எழுந்த நித்யா சமையலறையை நோக்கி செல்ல, "ஏன் பாட்டி அப்படி சொன்னிங்க?" என்ற ராமை விசாலம் முறைக்கவும் அதற்க்கு மேல் வாயை திறக்காமல் சாப்பிட துடங்கினான் ராம்.
பால் டம்பளருடன் வெளியே வந்த நித்யா "ராம் கிளம்பும்போது கூப்பிடுங்க" என்றவள் தன்னுடைய அறையை நோக்கி செல்ல, அமைதியாக உணவருந்தி கொண்டிருந்த தமிழ்செல்வியின் முகத்தை ஊன்றி கவனித்தார் விசாலம். அவளின் வாடிய முகத்தை கண்டவர் அவளின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு அவளிடம் கேட்டார்.
"செல்வி, ஆபீஸ் ஒர்க் எல்லாம் எப்படி இருக்கு? ராம் சொன்னான் நீ இப்போ அட்மினிஸ்ட்ரேட்டிவ் டிபார்ட்மென்ட் ஹெட் னு. எனக்கு தெரியும் உன்னுடைய திறமைக்கு அங்க பெரிய வேலை எதுவும் இல்லைனு. ஆனாலும் கம்பெனியை பத்தி நெறைய கத்துக்க முடியும்" விசாலம் சொல்ல, "இல்லை பாட்டி, அட்மினிஸ்ட்ரேட்டிவ் டிபார்ட்மெண்ட்ல நெறய ஒர்க் இருக்கு. கம்பெனியுடைய இன்ப்ராஸ்ட்ரக்சர் முழுதும் இந்த டிபார்ட்மென்ட் தான் ஹேண்டில் பண்ணுது. டிசைனிங் டிபார்ட்மெண்ட்ல ஒர்க் பண்றவங்க சில சமயம் ஒரே இடத்துல பத்து மணி நேரத்துக்கும் மேல உக்காந்து டிசைன் பண்ண வேண்டியது இருக்கும். அதே மாதிரி கார்மெண்ட்ஸ் மெனுபேக்சரிங் டிபார்ட்மெண்ட்ல பெரிய ஆர்டர்ஸ்ல ஒர்க் பண்ற எம்பலோயீஸ் சில நேரம் பன்னிரண்டு மணிநேரம்