(Reading time: 15 - 30 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"என்னனு சொல்லுடா...நான் கரெக்ட் பண்ணிக்கிறேன்" என்றவனை பார்த்து திரும்பி அமர்ந்தவள் "என்னனு சொன்னா தான் தெரியுமா??" என முறைக்க, "சொல்லமயே தெரிஞ்சுக்கிற அளவுக்கு நான் புத்திசாலி இல்லையே" என பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு பரத் சொல்ல, "அதான் தெரியுமே" என்ற இலக்கியா, "காலைல எட்டு மணிக்கு என்னை காலேஜ்ல விட்டுட்டு ஆபீஸ் போனவர் இப்போ மணி பத்தாச்சு. இப்போ தான் வரீங்க. என்கூட பேச கூட உங்களுக்கு டைம் இல்லை. நானும் ரெண்டு வாரமா பார்த்துட்டு தான் இருக்கேன். நான் உங்களை எவ்ளோ மிஸ் பன்றேன்னு உங்களுக்கு தெரியுமா??" என்றவள் கை விரல்களை தன்னுடைய விரல்களோடு பிணைத்து கொண்ட பரத், "சாரிடா. எனக்கு தெரியும். நானும் உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன். இன்னும் ஒரு ரெண்டு வாரம் டா. காலேஜ்ல ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணிட்டா அப்பறம் கொஞ்சம் பிரீ ஆயிடுவேன். ப்ளீஸ் டா குட்டிமா கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணிக்கோ" என்றவனின் தோளில் சாய்ந்து கொண்டவள் தலைமுடியை வருடியவன், "உனக்கு காலேஜ் எல்லாம் எப்படி போகுது?" என்றான்.

அவனை பார்த்து அமர்ந்தவள், "என் பிரெண்ட்ஸ் எல்லாம் ஒரே கிண்டல் பரத். என்ன இப்படி திடிர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க ரெண்டு பேரும் அப்படினு. டெய்லியும் ஒருத்தர் வந்து கேக்கறாங்க" என்றவள், "பரத் நான் ஒன்னு சொன்னா தப்பா நெனைக்க மாட்டிங்களே? " எனவும் "சொல்லுடா" என்று அவளை ஊக்குவித்தான் பரத்.

"நான் காலேஜ் போகலை பரத்" என்றவளை ஆச்சர்யமாக பார்த்த பரத், "ஏன்??" என்றான்.

"காலேஜ் முடிய இன்னும் நாலு மாசம் இருக்கு. அதுக்குள்ள வயிறு தெரிய ஆரம்பிச்சுடும். இப்போவே ஏன் இவ்ளோ அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கனு கேக்கறவங்க அதுக்கு அப்பறம் இன்னும் அதிகமா பேசுவாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றவள் அருகே நெருங்கி அமர்ந்தவன் "இலக்கியா, எப்பவுமே நாம மத்தவங்களுடைய கருத்துகளுக்கு பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. அதுவும் இல்லாம நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. இதுக்கு அப்பறம் யாரு என்ன பேசுனா என்ன? எனக்கு தெரியும் உனக்கு இன்ஜினியரிங் எவ்ளோ பிடிக்கும்னு. நீ இப்போ பின்வாங்குனா இவ்ளோ வருஷம் நீ பட்ட கஷ்டம், உன்னை படிக்க வைக்க உங்க அம்மாவும் அக்காவும் பட்ட கஷ்டம் எல்லாம் வேஸ்ட் ஆயிடும். எனக்கு வசதி இருக்கு. சொந்தமா கம்பெனி இருக்கு. நீ டிகிரி முடிச்சாலும் முடிக்கலைனாலும் உன்னை வசதியா வெச்சுக்க என்னால முடியும். உனக்கு எப்பவாச்சும் வேலைக்கு போகணும்னு தோணும் போது நம்ம கம்பெனியிலேயே என்னால உனக்கு ஒரு பொசிஷனை உருவாக்கி தரமுடியும். ஆனா இதெல்லாமே என் மூலமா உனக்கு வந்ததா இருக்கும். ஆனா என் வைப் என்னை டிபென்ட பண்ணி மட்டுமே இருக்கணும்னு நினைக்கிற ஹஸ்பண்ட் இல்லை நான். என் வைப் இண்டிபெண்டெண்ட்டா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.