(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

விளையாடணுங்கறது... ஆனா பல பேருக்கு அது கனவாவே முடிஞ்சு போய்டறது... நம்ம மைத்திக்கு அந்த கனவு நினைவாக வாய்ப்பு அமைஞ்சிருக்கு... அதை தட்டிப் பறிக்காதீங்கோ....”, இம்முறை காமேஷ் தன் பாட்டியை கேள்வி கேட்டான்...

“இந்த மாதிரி நீங்க மாத்தி மாத்தி ஏதோ பேசி அவளையும் ஏத்தி விட்டு எங்களை சம்மதிக்க வச்சேள்... உங்க பேச்சை கேட்டுண்டு உங்க அத்திம்பேரும் ஆடினார்... இந்த வாட்டி என்ன ஆனாலும் நான் அவளை அனுப்பறதா இல்லை... ஆத்து பொண்ணு வேற மாநிலத்துக்கு விளையாட போறதெல்லாம் எங்கயானும் நடக்குமோ.. இதுதான் கலிகாலங்கறது... சின்ன பசங்க நீங்கல்லாம் நாட்டாமை பண்ணாம போய் படிக்கற வேலையைப் பாருங்கோ.... எங்களுக்கு தெரியும் என்ன பண்ணணும்ன்னு...”, கற்பகம் பாட்டி சொல்ல, பத்ரி ஒரு தீர்மானத்துடன் மைத்தியை பார்த்தான்...

“மைத்தி இத்தனை நாளா நாங்க எல்லாம் உனக்காக பேசி உன்னோட கனவுக்கு துவக்கம் கொடுத்தோம்.. இதோ இங்க வந்து நிக்கற... இனிமே உனக்காக நீதான் போராட ஆரம்பிக்கணும்... உன் கனவு நிஜமாகணும்ன்னா அதுக்காக நியாயமா போராட ஆரம்பி...”, சொல்லிவிட்டு அமர, மற்றவர்களும் மைத்தி என்ன செய்யப்போகிறாள் என்று பார்த்தார்கள்...

“என்னடா அவளைத் தூண்டி விடறியா...”

“பாட்டி பத்ரிண்ணாவ எதுக்கு திட்ற... அவன் சொல்றது சரிதானே... எனக்காக நானும் பேசித்தானே ஆகணும்.... நான் கண்டிப்பா இந்த போட்டில கலந்துண்டுதான் ஆகணும் பாட்டி...”

“என்ன மைத்தி இது... பாட்டியை எதிர்த்து பேசிண்டு...”

“எதிர்த்து பேசலை மாமா... பாட்டிக்கு புரிய வைக்க போறேன்... இந்த இடத்துக்கு வர்றதுக்கு நான் எத்தனை கஷ்டப்பட்டேன்னு சொல்லப்போறேன்...”

“விடுடா வேணு... அவ பேசலை... அவளோட வயசு பேச வைக்கறது... இங்க பாரு மைத்தி... உன்னை வேற மாநிலத்துக்கு விளையாட அனுப்பறது எனக்கும், பாட்டிக்கும் பிடிக்கலை.... நாங்க அனுமதிக்கவும் மாட்டோம்... அதனால இதுல நீ இனிமே பேசறதுக்கோ, இல்லை எங்களுக்கு புரிய வைக்கறதுக்கோ எதுவும் கிடையாது... ஏதோ இங்க சென்னைலயே ஏதானும் போட்டி வந்தா விளையாடு... வேற மாநிலத்துக்கு போற கதையே வேண்டாம்...”, தாத்தா தீர்மானமாக சொல்ல, மைத்தியும் தன் தரப்பை சொல்ல தயாரானாள்....

“தாத்தா, பாட்டி ரெண்டு பேருமே கொஞ்சம் கோவப்படாம நான் சொல்றதை கேளுங்கோ... நான் இந்த அகாடமில சேர்ந்த கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் வருஷம் ஆறது... புயல், மழை, வெயில் எதுவும் பார்த்ததில்லை... என்ன இருந்தாலும் பயிற்சிக்கு போய்டுவேன்... ஏன் உங்களுக்கே தெரியும் தூரமானா நேக்கு எப்படி காலையும், வயத்தையும் வலிக்கும்ன்னு... அதைக்கூட பொருட்ப்படுத்தினதில்லை... கரெக்ட்டா டயத்துக்கு போய்டுவேன்... நிறைய நாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.