(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

விளையாடப்போகும் இடங்களையும் கூறினாள்.... இரண்டு போட்டிகள் தவிர மற்ற அனைத்தும் வெளி மாநிலங்களில்.... என்ன செய்வதென்று ஷ்யாமளாவும், அனந்துவும் பேசிக்கொண்டிருந்தனர்...

“என்னன்னா இது.... மொதல் போட்டியே பஞ்சாப்ன்னு போட்டிருக்கா.... அவ்ளோ தூரம் யார் இவளை கூட்டிண்டு போறது... நமக்கு ஊரும் தெரியாது, பாஷையும் தெரியாது.... எங்க தங்கி இவளை போட்டிக்கு கூட்டிண்டு போறது....”

“பாஷை பிரச்சனை இல்லடி சாமளா.... ஹிந்தி தெரியுமே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்... நீ சொல்றா மாதிரி எங்க தங்கறது... சாப்பிடறது.... இதுக்கெல்லாம் எத்தனை செலவாகும்ன்னு தெரியலையே...”

“ஹ்ம்ம் நாளைக்கு வேண்ணா நீங்க ஒரு எட்டு போய் அவளோட கோச்சை பார்த்துட்டு வரேளா... ரொம்ப அதிகம் ஆகும்ன்னு சொன்னா இவ வர மாட்டான்னு சொல்லிடலாம்... ரெண்டு பேரோட PF பணத்தையும் வழிச்சு எடுத்தாச்சு... வெளில கடன் வாங்கி எல்லாம் இவளை விளையாட அனுப்ப முடியாது....”

அருகில் அமர்ந்திருந்த காமாட்சி பாட்டி, “என்ன பேசற ஷ்யாமளா... குழந்தை எத்தனை ஆசையா இருந்தா.... நீ பாட்டுக்கு அவ விளையாட மாட்டன்னு சொல்ல சொல்ற... என்னண்ட இருக்கற நாலு வளையல்ல ரெண்டை வித்துடலாம்... அந்த பணம் நீங்க போய் தங்கி சாப்பிட எதேஷ்டம்....”, சமையல் அறையிலிருந்து வந்த மைத்தி தன் அன்னை பேசுவதைக் கேட்டு,

“அம்மா நாம பணமெல்லாம் ஒண்ணும் செலவழிக்க வேண்டாம்மா... அவாதான் எல்லா செலவும் பண்ண போறா.... அதுவும் தவிர நாங்க விளையாடறதுக்கு எங்களுக்கு சம்பளம் வேற கிடைக்கும்ன்னு கண்ணன் மாமா சொன்னார்... இத்தனை சின்ன வயசுலேயே சம்பாதிக்கப் போறேள்ன்னு எங்களை இன்னைக்கு மாமா கிண்டல் பண்ணிண்டு இருந்தார்...”

“இவ என்னன்னா பேத்திண்டு இருக்கா... இத்தனை நாள் எல்லா போட்டிக்கும் நாமதானே செலவழிச்சு அனுப்பினோம்.... இப்போ ஏதோ புதுசா அவா பண்ணுவான்னு சொல்றா...”

“இல்லடி சாமளா, இவ தமிழ்நாடு அணிக்காக விளையாடப் போறா இல்லையா... அதனால இருக்கும்... நான் எதுக்கும் கண்ணன் சார் ஆத்து வரைக்கும் போய் விஜாரிச்சுண்டு வரேன்...”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது தான் செய்த குணுக்கை கொடுக்க கீழ் இருந்து குரல் கொடுத்தார் கற்பகம் பாட்டி....

“ஷ்யாமளா உங்க அப்பாம்மாக்கு மைத்தி போட்டிக்கு போறது தெரியுமா...”

“இல்லைம்மா இப்போதான் இவ சொல்லி நமக்கே தெரிஞ்சுது... இனிதான் அவாளுக்கும் சொல்லணும்...”

“சரி நீ போய் அவாளண்ட சொல்லிட்டு வந்துடு... மைத்திக்குட்டி நீயும் போய் பாட்டி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.