(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

ஸ்கூல்லேர்ந்து சாப்டாம கூட போயிருக்கேன் ....”

“அதுதாண்டி சொல்றேன் .... எதுக்கு இத்தனை கஷ்டம்... பேசாம ஸ்கூல் போனோமா... படிச்சோமான்னு ராஜாத்தி மாதிரி எந்த கஷ்டமும் இல்லாம இருன்னுதான் சொல்றோம்...”

“ஆனா எனக்கு இது கஷ்டமாவே தெரியலை பாட்டி... ஏன்னா எனக்கு கிரிக்கெட் அத்தனை பிடிக்கும்.... சரி அதை விடுங்கோ... இதுவரை நான் எத்தனை போட்டில விளையாடி இருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா... நான் பரிசு வாங்கிண்டு வர்ற போட்டி பத்திதான் உங்களுக்கு தெரியும்... அந்த போட்டிகள் இல்லாம நிறைய போட்டிகள்ல விளையாடி இருக்கேன்....

இது நீங்க நினைக்கறா மாதிரி இல்லை தாத்தா... என்னதான் பெரிய திறமை இருந்தாலும் உடனே மேல வந்துட முடியாது.... இந்த நிலைக்கு என்னை கொண்டு வர பாஸ்கர் சார் எத்தனை பேரண்ட சண்டை போட்டிருக்கார் தெரியுமா.... முதலில் நான் வயசுல சின்னவ... அதுவும் தவிர அகாடமிலையும் அப்போதான் சேர்ந்திருந்தேன்... என்னை மாதிரி இருக்கறவாள்லாம் உள்ளூர் போட்டில விளையாடவே ரெண்டு வருஷத்துக்கும் மேல ஆகும்... ஆனா பாஸ்கர் சார், தனிக்கவனம் எடுத்து ஏகப்பட்ட பயிற்சி கொடுத்து என்னையும், துளசியையும் முதல் சில மாசங்கள்லையே போட்டிகள்ல விளையாட வச்சார்....

எனக்கும், துளசிக்கும் கிரிக்கெட்தான் வாழ்க்கைன்னு தெரிஞ்சதுலேர்ந்து ஒரு போட்டி விடலை... அத்தனைலயும் எங்களை கலந்துக்க வைப்பார்.... ஏன் தெரியுமா... ஒரு நாள் கண்டிப்பா நாங்க இந்தியாக்காக விளையாடுவோம்ன்னு... எங்களோட சேர்ந்து அவரும் அந்த கனவை நினைவாக்க அத்தனை பாடுபடறார்... Ofcourse நாங்களும் நன்னா விளையாடறோம்... இல்லைன்னு சொல்லலை...

நான் முதல்ல என்னோட ஆசைக்காகத்தான் பாட்டி விளையாட ஆரம்பிச்சேன்... ஆனா இப்போ எப்படியானும் கண்டிப்பா இந்தியாக்காக ஒரு போட்டிலயானும் விளையாடிடனும்ன்னு ஆசை வரது.... அது நடக்க இந்த போட்டிதான் முதல் படி... அதுல ஏறாதன்னு சொல்லாம கடைசி படி வரை வெற்றியோட ஏறுன்னு சொல்லுங்கோ பாட்டி....”, மைத்தி பேசி முடிக்க அந்த அறையே நிசப்பதாமாகியது...

தொடரும்

Next episode will be published on 2nd Sep. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.