(Reading time: 14 - 27 minutes)
Nenchil thunivirunthaal

அனைத்தையும் சகிக்க இயலாதவனாகி முகில்களுக்குள் சென்றுத் தன்னை மறைத்துக் கொண்டான்.

"தர்மா..." மீண்டும் ஒருமுறை இராகவன் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்க, அவரது குரலினை மீறி ஒலித்தது,

"அம்மா!" என்ற குரல்! அவ்வளவு நேரமும் எவரது குரலுக்கும் செவிமடுக்காதவர், சட்டென நிமிர்ந்தார். அது நிச்சயம் இளையவனின் குரல் தான்! தாய்மனதால் கண்டுப்பிடிக்க இயலாதா வந்திருப்பது யாரென்பதனை? இருப்பினும், ஒருவேளை அவன் நினைவாக இருப்பதால் பிரமையாக இருக்குமோ என்ற கவலையும் உடன் சேர்ந்துக் கொண்டது.

"அம்மா..எங்கே இருக்கீங்க?" மீண்டும் ஒலித்த குரலில் சந்தேகம் கலைந்தவர் முகத்தில் அளவிட இயலா ஆனந்தம் தாண்டவமாடியது!

"உதய்!" அவனது நாமத்தினை உச்சரித்தவராய் எவரது அனுமதியும் வேண்டாமல் அங்கிருந்து எழுந்து ஓடினார் தனதுப் புதல்வனைக் காண! தனது இரு நேத்திரங்களை ஒரு நொடி இறுக மூடித்திறந்தவர், தன் மகனைக் காண பதறி ஓடிய மனைவியினை ஏதோ ஓர் இயலாமையோடு நோக்கினார்.

"டேய்! யார்டா நீ?" அங்குப் பாதுகாவல் பணிப்புரிந்துக் கொண்டிருந்த தடியன் ஒருவன் வினவ, அவன் என்ன ஆத்திரத்தில் வந்தானோ அவனை நோக்கி ஒருமுறை சொடுக்கிட்டவன், தனது ஆட்காட்டி விரலினை இதழ் மேல் வைத்து அவனை மௌனமாகும்படி பொங்கிய கோபத்தினைக் கட்டுப்படுத்த சைகை செய்ய அக்காட்சி அவரையும் சற்றே கலக்கம் கொள்ள வைத்தது, அவன் தந்தை உட்பட! அத்தடியனை எச்சரித்துத் திரும்பியவனின் விழிகளில் தாயின் பிம்பம் பதிய அப்போதுத் தான் உயிரே வந்தது அவனுக்கு! அழுதிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது. அத்தனைக் கண்ணீருக்கும் அவன் ஒருவனே காரணம் அதனை எவராலும் மாற்ற இயலாது.

"மா!" அவர் முகத்தினைக் கண்டதும் பச்சிளங் குழந்தையாய் அடங்கிப் போனான் உடையான். தாயைப் பார்த்த ஆனந்தம் மட்டுமே அவனிடத்தில் இருந்தது. அவன் உண்மையில் வந்துவிட்டான்..ஆயினும் அனைத்தும் கற்பனையா என்றது அஞ்சியதுத் தாய்மனம்! எதிர் எதிரே இரு துருவங்களாய் நின்றனர் தாயும், மகனும்!

"மா!" என்று இருக்கரம் நீட்டி அவன் அழைக்க அப்போதுத் தான் தெளிந்தது அவருக்கு நடப்பவை ஏதும் பிரமையல்ல என்பது! என்ன நினைத்தாரோ,தன்னை அன்போடு அழைத்த புதல்வனை ஓங்கி ஓர் அறை கன்னத்திலே வைத்தார் தர்மா. அவனை அறைந்த அறை அங்குச் சூழ்ந்திருந்த அனைவருக்குமே வலித்திருக்கும்! என்னத்தான் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்றுக் காரணம் விளங்காமல் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.