பண்ணிருந்தா, அன்னிக்கு அங்கேயே இரண்டு போடு போட்டு இருப்பாரு! உதய்...! நீ சின்னப் பையன் இல்லை! உனக்குன்னு ஒரு வயசு வந்துடுச்சு! நாளைக்கு அப்பாங்கிற இடத்தை நீயும் அடைய தான் போற, ஒரே ஒரு நிமிடம் அத்தை இடத்திலிருந்தோ, மாமா இடத்திலிருந்தோ யோசித்துப் பாரு! சரிடா...நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். நாளைப்பின்னே ஏதோ ஒரு குழந்தையை நீ தத்தெடுத்து வளர்க்கிறன்னு வை! அந்தக் குழந்தைக்கு நீ அவன் அப்பா இல்லைன்னுத் தெரிய வருது...நீ பண்ற அதே முட்டாள்தனத்தை அவனும் பண்றான்..உனக்கு எப்படி இருக்கும்? சந்தோஷமா இருக்குமா?" அதிரடியாய் வினா வைத்தாள் அவள். அவ்வினாவிற்கு பதில் நல்க இயலாமல் திகைத்து நின்றான் உடையான்.
"நீ வேணாம்னு விலகி போனாலும் எங்க எல்லாருக்குமே உன் மேலே உரிமை இருக்கு உதய்! நீ எங்க வீட்டுப் பையன்னு யாராலும் மாற்ற முடியாது. நீ எடுத்த முட்டாள்தனமான முடிவு எவ்வளவுப் பிரச்சனைக் கொடுத்திருக்கு தெரியுமா! புரிந்துக்கொள் உதய்! எல்லாம் மாறும், நடந்த விஷயங்களில் உன்னை நீயே தொலைத்துட்ட, நான் பார்த்த உதய் இருக்கானே...அவனால தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவுமே இல்லை. எனக்கு தெரிந்து அவன் எதுக்காகவும் தன் உறவுகளை விட்டுக்கொடுத்ததில்லை." ஆணித்ணனமாய் எடுத்துரைத்தவளை இமைக்காமல் நோக்கினான் உடையான்.
"நீ திரும்பி வந்ததே போதும்! அவர் கோபப்பட்டதை எல்லாம் மனதில் வைத்துக்காதே! உனக்குத் தான் அவரைப் பற்றி தெரியுமே, காலையில சரியாகிவிடுவார்! நீ பசியோட இருப்பேன்னு தெரியும்! நான் போய் சாப்பாடு கொண்டு வரேன்." ஆறுதல் மொழி உதிர்த்தவளிடத்தில் வேண்டாம் என்று வாடிய முகத்துடன் தலையசைத்தான் உடையான்.
"சும்மா இருடா! இவன் ஒருத்தன்..உனக்கு வேற வேலையே இல்லை." அவன் கரத்திலே ஒரு போடு போட்டுவிட்டு அவனுக்கென உணவைக் கொணர வெளியேறி நடந்தாள் மாயா.
ஒரு நொடியில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தேறி விட்டன. மாற்றங்கள் எவ்வளவு விரைவாக ஒருவரது வாழ்வினைத் தாக்கும் தன்மைக் கொண்டதாய் உருவெடுக்கிறது. ஒரு வாரம் முன் சுதந்திர பட்சியாய் உலா வந்தவன் இன்று உணர்வுகளுக்கு மத்தியில் சிறைப்பிடிக்கப்பட்டவன் ஆனான். ஆனால் இத்தகு மாற்றங்களுக்கான விதையோ பலக் காலங்களுக்கு முன்பே விதைக்கப்பட்டிருந்திருந்தது. எத்தகு மாற்றமும் ஒரு நொடிப் பொழுதில் நிகழ்ந்தேறி விடும் ஆனால் அதற்கான ஆயத்தப்பணிகளுக்கு யுகங்கள் கூட தேவைப்படலாம். ஏற்பட்ட திடீர் மாற்றத்தினை எவ்வாறு சமநிலை பெற செய்வது என்று திக்கற்று நின்றான் உடையான்.
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Nenjil thunivirunthaal story main page
{kunena_discuss:1163}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.