(Reading time: 14 - 27 minutes)
Nenchil thunivirunthaal

கங்கா, உடையானை அறைந்ததும் ஏனோ பதறிப் போனாள். அவனோ அறை வாங்கிக் கொண்டு, நான் தாயிடத்தில் வாங்காத அறையா என்பதாய் அதைப்பற்றிக் கவலையே கொள்ளாமல் அவர் முகத்தினை ஏறிட்டான். மீண்டும் விழுந்தது மற்றொரு அறை! அவனுக்கு இதுத் தேவைத்தான்! கொஞ்சநஞ்ச காரியமா புரிந்தான் அவன்?

"எங்கேடா போன? பாவி..!என்கிட்ட கூட சொல்லாமல் எங்கேடா போன?" என்று ஓயாமல் தன் கோபத்தை எல்லாம் அவனைத் தன் விருப்பத்திற்கு அவனைத் துவைத்து எடுத்தார் தர்மா. அதனைக் கண்ட பலரும் பதறிப்போக, ஆக்ரோஷத்தின் உச்சத்தில் நின்றிருந்தவரை வேகமாய் ஓடிவந்து தடுத்தார் இராகவன்.

"விடுங்க.."என்று அவர் பற்றிய கரத்தினை உதறினார் அவர். அனைவர் மேலும் அவர் காட்டிய வெறுப்பு எல்லாம் புதல்வனின் விஜயத்தில் காணாமலே போனது.

"எங்கேடா போன? வாய்திறந்து சொல்லப் போறீயா இல்லையா?" அவன் சட்டையைப் பிடித்து மேலும் ஒரு போடு போட்டார் அவர்.

"வீட்டில தான் இருந்தேன்..எங்கேயும் போகலை!" பாலகனாய், அச்சத்துடன் தாயிடத்தில் உரைத்தான் அவன். அப்பதிலை கேட்டதும் மேலும் ஏறிவிட்டது அவருக்கு!

"பொய் சொல்ல கற்றுக்கிட்டியா? ரவியை வேற பொய் சொல்ல வைத்திருக்க? எங்கே இருந்து வந்தது இந்தப் பழக்கம் எல்லாம்? என்கிட்ட எப்படி பொய் சொன்ன?" தொடர் அடிகள் விழுந்தவண்ணமே இருந்தது.

"தர்மா நிறுத்து!" அவரைப் பற்றி இழுத்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் இராகவன். ஏனோ அவரைக் காணும் போது அவனுக்கு மனம் இயல்பாக மறுத்தது. தாயினை அவரல்லவா வலுக்கட்டாயமாக இங்கு இழுத்து வந்தார்.

"ஏன்டா இப்படி பண்ற?" சுற்றி யார் இருக்கிறார், சூழல் என்ன இருக்கிறது என்று எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாதவராய் அப்படியே மண்டியிட்டு கதறி அழுதார் தர்மா. அவர் அங்ஙனம் உடைந்துப் போனதனை பலரும் அன்றுத்தான் வாழ்வில் கண்டனர், இராகவனைத் தவிர! தாயின் கண்ணீரை சகிக்காதவன் நொடிந்துப் போனவனாய், அவர் அருகே தானும் மண்டியிட்டான். மென்மையாக அவரது கரங்களைப் பற்றித் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்,

"வலிக்குது!" என்றுக் கூற, மனமே உருகிப் போனது அவருக்கு! அவர்களுக்கு இடையில் எவ்வளவு ஆழமானப் பந்தம் இருக்கிறது என்பதனைக் கண்கூடாக கண்டது வையமும்! அவன் வலிக்கிறது என்றதும், எதையும் சிந்திக்காமல் தன் மகனை ஆரத்தழுவிக் கொண்டார் தர்மா. ஒருவன் எவ்வளவுப் பெரிய மாவீரன் ஆகிடினும், தாயிடத்தில் அன்று என்றுமே பாலகன் தான் அல்லவா! ஒருவழியாய் அவர்களின் யுத்தமானது முடிவினை அடைய தன் தாயின்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.