(Reading time: 9 - 18 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 11 - ஜெபமலர்

த்யா தனது அறையில் சற்று பதட்டத்துடன் காணப்பட்டான். 

நொடிக்கொரு முறை தன் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நிமிட நேரங்கள் கூட அவனுக்கு பல மணி நேரங்களாக தோன்றியது போல. அலேத்துக் கொண்டான்.

 அழைப்பு வராமல் போகவே ஆத்திரத்தை மொபைலின் மீது காட்ட முடியாமல் தன் கைகளை மடக்கி சுவற்றில் குத்தினான். 

பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பயந்து கொண்டு இருக்க அவனது காத்திருப்பு வீணாகவில்லை. சிறிது நேரத்திலேயே அவன் மொபைல்போன் அழைக்க அவசரமாக எடுத்து சொல்லு ... என்ன விஷயம் ஒரு விஷயத்தை பார்த்துட்டு சொல்ல சொன்னா அதற்கு இவ்வளவு நேரமா என்று கோபமாக கேட்டான்‌..

சாரி ணா.. அந்த பெண்ணை பின்தொடர்ந்து போயிட்டு வர இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. நீங்கள் சொன்ன மாதிரியே அந்த குயிலியை பின்தொடர்ந்து போனோம்.  அநாதை ஆசிரமத்துக்கு போனாள். அங்க போயிட்டு அவள் வெளியில் வருவதற்கு ரொம்ப நேரம் ஆச்சு. போகும்போது வெறும் கையா தான் போனா. ஆனால் திரும்பி வரும்போது அவளுடைய கையில் ஒரு கவர் இருந்தது. ஆனா அதுல என்ன இருந்ததுன்னு தெரியல.

 நாங்க அவளை அட்டாக் செய்து அந்த கவர பிடிங்கிடலாம் என்று பார்த்தோம். ஆனால் அவகிட்ட நெருங்கவும் அந்த நேரத்துல போலீஸ் ரோந்து வரவும் சரியாய் இருந்தது.

டேய் முட்டாளா டா நீ நீ யாருன்னு தெரிஞ்சா அவங்கவங்க வேலைய பாத்துட்டு போயிருப்பாங்க....

 இல்லனா... இப்போ புதுசா வந்திருக்கிற ஆளு ரொம்ப தான் தன் பவரை காட்டுறாரு. அதனால சில நேரத்தில் கொஞ்சம் அடங்கித்தான் போக வேண்டியது இருக்கு.

அண்ணா ஆனா நாங்க இன்னும் அவளை கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம்.

 இப்ப நாங்க என்ன செய்யணும்... தெருவே ஒரே அமைதியா தான் இருக்கு. இப்பவே நேர வீட்டில் போய் ஒரே போடா போட்டுடலாமா..

 ஒன்னும் பிரச்சனை இல்லடா... இதுல ரொம்ப அவசரபடாதே. கொஞ்சம் பொறுமையா இரு என்றான்.

 நீ அவளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இரு. நாளைக்கு  நீ தூத்துக்குடிக்கு போக வேண்டியதிருக்கும். எதற்கும் தயாராய் இரு. இப்போ நீ அவளை கண்காணித்து கொண்டே இரு. ஆனாலும் எது செய்வதாக இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு செய்.

 நான் மீண்டும் உன்னை அழைத்து அடுத்த வேலையை சொல்லுற வரைக்கும் பொறுமையாய்

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.