(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

“இப்போ அனந்து எங்க ரமேஷ்....”

“அவரை ஆபரேஷன் தியேட்டர் கூட்டிட்டு போயிருக்காங்க சார்... டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க... இன்னும் வெளிய வரலை... அவங்க வந்தாதான் தெரியும்....”

அடுத்த ஒரு மணி நேரம்  அனனவரின் பிரார்த்தனையுடனும், பதை பதைப்புடன் சென்றது... ஒரு வழியாக மருத்துவர் வெளியில் வந்தார்... 

செவிலியர் ஒருவர் வந்து ரமேஷிடம் மருத்துவர் அழைப்பதாக சொல்ல.... ரமேஷ் அனந்துவின் குடும்பம் வந்துவிட்டதாக கூறி அவர்களை அறிமுகப்படுத்தினான்...

“யாரானும் ரெண்டு பேர் மட்டும் வாங்க சார்...  கூட்டமா போக வேண்டாம்...”, நர்ஸ் கூற , சியாமளாவும்,  அவரின் பெரியண்ணனும் மருத்துவரை சந்திக்க சென்றார்கள்....

“வாங்க... நீங்கதான் பேஷண்ட் கூட வந்ததா...”

“நான் அவரோட மச்சினர், இவ அவரோட மனைவி டாக்டர்.... அவருக்கு எப்படி இருக்கு... பெரிசா எதுவம் இல்லையே....”

“உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை... ஆனால் நிறைய இடத்துல அடி பட்டிருக்கு... கை, கால்ல நாலு இடத்துல எலும்பு முறிஞ்சிருக்கு....  பின் பக்கமா விழுந்ததுல தலைலையும், முதுகுலையும் அடிபட்டிருக்கு.....  இப்போதைக்கு கை, கால் எலும்பு முறிவுக்கு சிகிச்சை கொடுத்திருக்கோம்.... நாளைக்கு முதுகுத் தண்டு x-ray எடுத்து பார்த்துட்டு அடுத்த கட்ட சிகிச்சை ஆரம்பிக்கணும்... அதே மாதிரி நாளைக்கு நியூரோ டாக்டர் வருவார்... அவர் வந்து பார்த்துட்டு தலைக்காயம் பத்தி சொல்ல முடியும்....  நாளைக்கு மதியத்துக்கு மேல்தான் எதையும் முழுசா சொல்ல முடியும்....”

“இப்போ நாங்க அவரை பார்க்க முடியுமா டாக்டர்... “

“அவர் உடம்பை அசைக்க கூடாதுன்னு நாளைக்கு வரைக்கும் மயக்கத்துலதான்  வச்சிருப்போம்...  யாராவது ஒருத்தர் மட்டும் போய் பார்த்துட்டு வாங்க.... கிட்ட போறது, அவரை தொட்டு பார்க்கறது, சத்தம் போடறது எதுவும் கூடாது...”, மருத்துவர் கண்டிப்புடன் கூற அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்தார்கள்...

சியாமளா சென்று அனந்துவை பார்த்துவிட்டு வந்தாள்....

“எப்படிம்மா இருக்கார்....”

“எல்லா இடத்துலையும் வயர் சொருகி வச்சிருக்கா... உடம்பு முழுக்க கட்டு போட்டிருக்கு... முகம் மட்டும்தான் தெரியறது...”, சியாமளா அழுதபடியே சொல்ல, அவளின் சகோதரர்கள் சமாதானப்படுத்தினார்கள்.....

அனந்து அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதால் யாரும் கூட இருக்க முடியாது... எனவே

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.