(Reading time: 16 - 32 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

ஜனா...

ஸ்வேதா தன்னை சந்திக்க வர சொல்லி அனுப்பி இருந்த மெசேஜ் பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சியில் தனுவை கூட்டிக் கொண்டு அந்த ரெஸ்டாரன்ட் சென்றான்.

ஜனாவை ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்வேதாவிற்கு தனுவை பார்த்ததும் வெறுப்பு தான் வந்தது. ஆனால் எதையும் காட்டிக்கொள்ளாமல் சாப்பிட ஆர்டர் செய்தாள்.

ஸ்வேதா சாப்பிட்டு கொண்டே ஜனாவை பார்க்க அவனோ குழந்தைக்கு ஊட்டவும் முடியாமல் தானும் சாப்பிட முடியாமல் இருந்தான். ஆனாலும் எதையும் கவனிக்காதவள் போல சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டு ஜனாவையே பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.

ஜனாவோ சாப்பிடாமலே கை கழுவி விட்டு வந்தவன் அன்போடு ஸ்வேதா என்றான்.

அவள் பதிலுக்கு ம்ம் கொட்ட நம்ம மேரேஜ் பற்றி யோசித்தாயா என்றான்.

ம்ம் என்று அவளுக்கு பதிலுக்கு தலையசைத்தாள்.

சொல்லு ஸ்வேதா என்று சொல்லவும் குழந்தை அழவும் சரியாக இருந்தது. ஒருவழியாக தனுவை சரி செய்து தூங்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

ஸ்வீனா முக்கியமான விஷயமாக வெளியே சென்றிருக்கிறாள்‌. அதனால்தான் தனுவையும் அழைத்துக் கொண்டு வர வேண்டியதாகி விட்டது என்று சற்று வருத்தத்துடன் சொன்னான் ஜனா.

அப்படி என்றால் எப்போதுமே இந்த குழந்தையை உங்கள் தங்கையே பார்த்துக் கொள்ளவார்களா என்றாள் ஸ்வேதா.

ஸ்வே... அதான் நாம் இருக்கிறோமே... நாமே பார்த்துக்கொள்ளலாம்‌ ஏதாவது தேவை என்றால் அவளிடம் விட்டால் அவள் பார்த்துக்கொள்வாள் என்று இயல்பாக பதில் சொன்னான் ஜனா.

ஓ... அப்படி என்றால் இந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக தான் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்கள் அப்படி தானே...

ஸ்வே... என்ன சொல்ற நீ... நீங்க இரண்டு பேரும் எனக்கு முக்கியம் தான்..

ஆனால் எனக்கு நீங்க மட்டும் தான் முக்கியம்.  உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வர நான் தயாராக இருக்கிறேன். அதுபோல நீங்களும் வர வேண்டும் என்று நினைக்கிறேன் என்றாள்.

நீ என்ன சொல்லற ஸ்வே...

இன்னுமா புரியல... அந்த குழந்தையை விட்டு விட்டு வாருங்கள். நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றாள் இயல்பாக...

அவளை எப்படி விட முடியும். அவள் என் குழந்தை என்றான் உணர்ச்சி பெருக்குடன்...

உங்கள் குழந்தையோடு நீங்கள் வாழுங்கள். என்னை விட்டு விடுங்கள்.. நான் பெரிய தியாகி

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.