(Reading time: 16 - 32 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

உங்கள் இருவரையும் நன்றாக பார்த்துக் கொள்வாள்.

நீங்கள் யாரை தேர்வு செய்தாலும் உங்களுக்கு நல்ல ஒரு மனைவி கிடைக்கலாம். ஆனால் தன்சிகாவிற்கு நல்ல ஒரு அம்மா கிடைப்பார்களா என்று மட்டும் யோசிச்சு பாருங்க... அதே நேரத்துல நீங்க ஜனனியை திருமணம் செய்து கொண்டால் தன்சிகாவிற்கு நிச்சயம் நல்ல அம்மாவும் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியும் கிடைப்பாள். அத புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க... நல்லா யோசிச்சு முடிவு என்னன்னு சொல்லுங்க.. உங்கள் முடிவு தெரிஞ்ச அப்புறமா தான் நானும் ஜனனிக்கிட்ட இதைப் பத்தி பேச முடியும்.

 ரொம்ப ஈஸியான விஷயம் இல்ல... ஆனா அவளை ஒத்துக்க வைக்கனும். அதுவே பெரிய விஷயம் தான்... உங்க முடிவை நீங்க எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்லுங்க

முக்கியமான முடிவு தான் ... ஆனால் அதை நான் எடுக்க முடியலை... என்னால எதையும் யோசிக்க கூட முடியவில்லை.‌. நீ ஒரு முறை ஜனனியின் கடந்த காலம் பற்றி விசாரித்து பாரேன்.

அப்படி என்றால் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லை தானே... நான் யோசிக்காமல் விசாரிக்காமல் என் சுய லாபத்திற்காக இப்படி பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா என்று கோபமாக கேட்டாள் ஸ்வீனா.

அப்படி இல்லாமா ஆனாலும்...

ஓகே அண்ணா... எவ்வளவு தேட முடியுமோ அவ்வளவு தேடுங்கள்... எவ்வளவு விசாரிக்க முடியுமோ அவ்வளவு விசாரிச்சுப் பாருங்க... இதுக்கு மேல உங்க வேலையில் நான் அதாவது உங்க விஷயத்துல நான் தலையிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள் ஸ்வீனா.

ஏனோ ஸ்வீனா கோபமாக செல்வதை ஜனார்த்தனனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

அஸ்விட் ஏதாவது பேசுடா என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கினான் ஜனார்த்தனன்..

மச்சான்... நான் முக்கியமான வேலையாக இருக்கிறேன். என்னை தொந்தரவு செய்யாதே என்று சொல்லி விட்டு தன் வேலையிலேயே தீவிரமாக இருந்தான் அஸ்விட். கோபத்தில் அவனை முறைத்து விட்டு கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.

அவன் நினைவுகள் எங்கெங்கோ சுற்றி திரிந்ததது. அவனுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரிந்தது. தன்னால் ஸ்வேதாவை மறக்க முடியாது என்பது மட்டுமே.

கடந்த காலத்தை மறக்க முடியாமல் போதைக்கு அடிமையாகி பிஸினஸை கண்டு கொள்ளாமல் விட்டு மருத்துவமனை செலவு என்று பணமெல்லாம் வீணாகி கரைந்து கொண்டு இருக்கும் போது தூக்கி நிறுத்தியவன் தான் தங்கை ஸ்வீனா..

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.