(Reading time: 16 - 32 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

போவதாக பேசிக் கொள்கிறார்களே... அவன் டாப் பிஸினஸ்மேனாமே என்று சற்று நக்கலாக சொன்னாள் ஸ்வீனா.

இன்னொரு முறை ஸ்வேதா பத்தி தப்பா பேசாதே கோபமாக ஆரம்பித்தவன் கெஞ்சலாக முடித்தான்.

இந்த காதல் சில பேரை பைத்தியமாக்கி விடுகிறது.. சில பேரை தைரியமானவர்களாக்கி விடுகிறது.. இந்த காதலுக்கு இருக்கிற சக்தியை போல பெரிய சக்தி இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்று நினைக்கிறேன்.. உன்னை கூட இப்படி அடி முட்டாளா மாற்றி இருக்கிறேதே என்று யோசிப்பது போல பாவனை செய்தாள் ஸ்வீனா.

கோபத்தில் முகம் சிவக்க கைகள் இறுக ஆனால் பதில் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்தான் ஜனார்த்தனன்.

இதற்கு மேல் வம்பு பேச்சை தொடர்ந்தால் நினைத்தது நடக்காது என்றவள் அன்பாக அண்ணா என்றாள்.

அவளின் அழைப்பில் உருகி போனவன் சொல்லுமா, நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காமல் கேட்டான்.

நீ ஜனனியை திருமணம் செய்து கொள் என்றாள் அதிரடியாக...

நீ சொன்னா எல்லாமே கரெக்டா தான் இருக்கும் ஸ்வீனா... ஆனால் அதற்காக ஜனனியை நல்லவள் என்று என்னால நம்ப முடியல...  எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. ஒருவேளை அந்த ஜனனியும் கெட்டவளா இருந்து விட்டாள் என்றான்.

அந்த ஜனனி கெட்டவள் என்றால் அவளை நல்லவள் என்று சொல்லும் உன் தங்கையும் கெட்டவள் தானே என்றாள் விடாப்பிடியாக...

ஸ்வீனா என்று அதட்டினவன் உன்னை போல ஒரு தேவதை இனி பிறந்து தான் வர வேண்டும் ம்மா என்றான் அவன்.

பிறந்து தான் ஜனனியாக வந்து இருக்கிறாள் அண்ணா என்றாள் அவள்.

அவனால் பதில் ஏதும் பேச முடியவில்லை.. அஸ்விட் ஏதாவது பேசுவானா என்று அவனை பார்த்தான். அவனோ இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதை போலவும் வேறு உலகில் சஞ்சரிப்பவனை போலவும் வேலையில் கவனமாக இருந்தான்.

அண்ணா... ரொம்ப குழப்பிக் கொள்ளாதீங்க... உங்க காதல் முக்கியமா இல்லன்னா உங்க வாழ்க்கை முக்கியமானு யோசியுங்கள்.. உங்க காதல் தான் முக்கியமானது என்றால் ஸ்வேதாவை தேடி செல்லுங்கள். ஆனால் ஸ்வேதா வால் தன்சிகாவை தன் பொண்ணாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் எதிர்காலம் முக்கியம் என்றால் ஜனனியை திருமணம் செய்து கொள்ளுங்கள். அவள்

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.