தாங்கள் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால், இந்த ஊர் விவரங்களை நீங்கள் அறியவும், லைஸன்ஸ் பெறவும், இதர வேலைகளில் ஆதரவு தரவும் முன்நிற்போம்.
உங்கள் வக்கீலை எங்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். அவருக்கும் உதவி செய்வோம்.
அவர் கேட்கிற பத்திரம் எதுவானாலும் தருகிறோம்.
தயவுசெய்து பட்டா விஷயத்தில் சற்று கூடுதல் அவகாசம் தேவை. அதையும் பொறுத்துக் கொள்ளணும்.
எப்படியும் புதிய கட்டிடம் முடிவதற்குமுன் பட்டா கிடைத்துவிடும்....."
" நிரஞ்சன்! நீங்கள் சொன்னவை அனைத்தையும் ஏற்கிறேன். நிச்சயமாக, ஊக்கத்தொகை தருகிறேன். என் பிரச்னைகளை தீர்க்க நீங்கள் உதவ முன்வந்துள்ளது போல, உங்கள் பிரச்னைகள் தீர்க்க நானும் உதவி செய்து விரைவில் இங்கு என் புதிய கடை துவக்க முடியும் என நம்பிக்கை வந்துவிட்டது. ஆம், சென்னையில் உள்ள வக்கீலையே அமர்த்தி, அவர் விலாசத்தையும் தருகிறேன்.
என்னால் அடிக்கடி இங்கு வந்துபோக முடியாது. என் பிரதிநிதிகளாக, நீங்கள் செயல்படுங்கள். கடை திறந்து வியாபாரம் துவங்கிய பின், எனது வாடிக்கையாளர் நீங்களும் உங்கள் சுற்றமும் நட்பும்தான்!
சரி, நேரமாகிவிட்டது, டின்னருக்குப் போவோம்!"
டின்னர் முடிந்து, இறுதி சுற்று பேச்சுவார்த்தைகள் பேசியபின் நிரஞ்சனும் அவர் கூட வந்தவர்களும் விடை பெற்றனர்.
வெளியே வந்ததும், முதல் காரியமாக மற்ற இருவரும் நிரஞ்சனை கட்டி அணைத்து முத்தமிட்டனர்.
" தலைவா! பிரமாதமாக பேசி, ஒரு கோடியை ஒண்ணரை கோடிக்கு உயர்த்திட்டீங்க! அதுவும் அந்த ஊக்கத்தொகையை கறுப்புப் பணமாகத் தரச் சொன்னது மாஸ்டர்ஸ்ட்ரோக் நாங்க எதிர்பார்க்கவே இல்லை, இந்த ஒரே மீட்டிங், எங்களுக்கு பணமழை கொட்டப் போவதை!
தலைவா! மற்ற ஓனர்கள் உங்களுக்கு கோவிலே கட்டி கும்பிடுவாங்க!"
" போதும். எவ்வளவு சீக்கிரம் பத்திரங்கள் நகல் எடுத்து தரமுடியுமோ, அதை செய்யணும்.
அநேகமா, நாளைக்கே வக்கீலின் விலாசத்தை செட்டியார் சொல்லிடுவார்.
அதை உங்களுக்கு ஈமெயில்லே தெரிவிக்கிறேன். வெளியூர் ஓனர்களுக்கும் உடனே தெரிவிக்கிறேன். வாடகைக்கு குடியிருக்கிற நபர்களுக்கு உடனே காலி பண்ணச்சொல்லணும். அவர்களுக்கு ஏதாவது பணம் தருவதாக இருந்தாலும், தயங்கக்கூடாது....."
" தலைவா! கவலையே படாதீங்க! பணம் பாதாளம் வரை போகும். அவங்களுக்கு பணம்