" ஆமாம் நம்முடைய ரேச்சல்தான். ஏனெனில் அந்த ரிப்போர்ட்டில் அவளுடைடைய அப்பா பெயர் மேத்யூஸ் என்றும், அம்மா பெயர் ஷீலா என்றும் இருந்தது. அவளுடைய புகைப்படமும் அதில் இருந்தது. எனக்கு அதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால்.."
"என்ன ஆனால்…"
"அந்த ரிப்போர்ட்டில் இருந்த சில விஷயங்கள் எனக்கு குழப்பமாக இருந்தன அந்த ரிப்போர்ட்டின்படி அவளுக்கு குழந்தையும் இருந்திருக்கிறது. ஏனெனில் அவளுடைய ஹெல்த் ரிப்போர்ட்டில் அந்த விவரம் இருந்தது. அப்படி என்றால் ரேச்சல் திருமணமானவள். ஆனால் அவள் கணவனுடன் இப்பொழுது இல்லை. ஒருவேளை அவளுக்கு விபத்தினால் நினைவுகள் மறந்து போனதால் அவன் அவளை விட்டு விலகி சென்று விட்டானா என்று புரியவில்லை. இதுபற்றி ஷீலா மேடமும் எதையும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. அவளுக்கு விபத்து நடந்ததும் அம்னீசியா வந்ததையும் மட்டுமே சொன்னார்கள். எதற்காக இந்த விஷயத்தை மறைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை"
"அதை நம்மிடம் சொல்ல தேவையில்லை என்று நினைத்து இருப்பார்கள்."
"ஆனால் நமக்கு தேவையான விஷயம் அல்லவா?"
"எனக்கு என்னவோ இது பிரச்சினையாக தோன்றவில்லை.அவளுடைய கணவன் பற்றி ஒரு விபரம் இதுவரைக்கும் எனக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை இருவரும் பிரிந்து இருக்கலாம் விவாகரத்து கூட ஆகியிருக்கலாம் நான் நல்லபடியாக நினைப்போமே" என்று நந்தினி சொன்னாள்.
"கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசிச்சு பாரு. நீ உனக்கு ஒத்து வர மாதிரி நிலைமைய புரிஞ்சுக்க கூடாது. ஆமா, நான் கேட்கிறேன் இப்படி எல்லாம் நம்ம ப்ளான் பண்ணி ரேச்சலையும் சத்தியையும் சேர்த்து வைக்கனும்னு என்ன அவசியம் வந்தது?. சத்யனுக்கு வேற பொண்ணே இந்த உலகத்துல கிடைக்க மாட்டாளா… அல்லது சத்தின் வந்து இவளை எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க என்று சொன்னானா? எதுவுமே இல்லாமல் நீ இப்படி எல்லாரையும் கார்னர் செயகிறாய். ஸ்டாப் இட்"
"உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை. ரேச்சலை பாக்குறப்போ அவளை பற்றி பேசறப்போ.. அண்ணன் கிட்ட ஒரு மாற்றம் தெரியுது. வேறு எந்த பொண்ணு கிட்டயும் அவரு அந்த மாதிரி ரியாக்ட் பண்ணி நான் பார்த்ததே இல்ல. அதனாலதான் இந்த பொண்ணுதான் உலகத்திலேயே அவருக்கான கடைசியான ஒரே பொண்ணுன்னு நான் நம்புறேன். அதனால அவங்களை சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறேன். நீங்க சொல்ற மாதிரி ரேச்சலுக்கு கல்யாணம் ஆகியிருந்தாலும் அவ ஹஸ்பன்ட் கூட இல்லாம இருக்கலாம். ரேச்சல் சத்யன் ரெண்டு