அவரை இப்போதே தயார் செயவது நல்லது.
இந்த ரேச்சல் அலைஸ் மீரா இப்போது எடியை பார்க்க போய் இருக்கிறாள். ஷீலா அத்தை வாராந்திர மருத்து முகாமில் இருப்பார். அவரிடம் பேச இதுதான் சரியான சந்தர்ப்பம்.
அவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு முகாம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.
ரஞ்சனுக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது. பேசிக் கொண்டு இருக்கும் போதே சத்யன் சொல்லிக்காமல் கிளம்பி சென்றது மனதை உறுத்தியது. அவனுக்கு பிடிக்காத விஷயத்தை செய்து விட்ட கவலை வந்தது. அவனை சமாதானம் செய்தாக வேண்டும் என்று தீர்மானித்து அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
"சார்… எமர்ஜென்ஸி மீட்டிங் இருக்கு. எம்.டி உங்களை அவர் அறைக்கு வரச் சொன்னார்."
மாமா எப்போது இங்கு வந்தார். நந்துகூட ஒன்றும் சொல்லவில்லையே… அவன் யோசனையுடன் எம்.டி அறைக்கு சென்றான். அங்கு சத்யனும் அமர்ந்திருந்தான். அவர்களுடன் ஆடிட்டர்… ப்ராஜெக்ட் மேனேஜர்… ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
"வா ரஞ்சன். சில முக்கியமான முடிவுகளை எடுக்கதான்ம மீட்டிங் நடக்குது" மகேஸ்வரன் சொன்னார்.
"யெஸ் மாமா" என்றபடி அமர்ந்தான்.
"இப்ப புதியதாக வர்ற ப்ராஜெக்ட்ல நிறைய புதிய வசதிகள் தர்றாங்க. அவற்றை நாமே செய்ய வேண்டும் எனில் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும். டெல்லியில் நேனோ டெக்னாலஜி முறைகளை காட்சிபடுத்தும் எக்ஸ்போ நடைபெறுகிறது. அதில் யாராவது கலந்து கொள்ள வேண்டும். யார் போகப்போகிறீர்கள்?" அவருடைய பார்வை கேள்வியாக சத்யன்… ரஞ்சனை பார்த்தது.
"நான் கலந்துக்கொள்கிறேன்" சத்யன் சொன்னான்.
"விஷயம் அது மட்டுமல்ல… நியுயார்க்கில் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி தொடர்பாக ஒரு பயிற்சி வகுப்புகள் நடக்க இருக்கின்றன. அதையும் நீதான் அட்டென்ட் பண்ண வேண்டும். ஏனெனில் அதற்கான நேர்முக தேர்வும் டெல்லியில் நடைபெறுகிறது."
"ஓகே… "
"அதன் பயிற்சி காலம் ஆறு மாதங்கள்"
"பிரச்சினை இல்லைப்பா. நானே போவதுதான் நல்லது. நந்தினியுடன் ரஞ்சன் இருக்க வேண்டும்"
"நல்லது… இப்போது நீ பார்க்கும் வொர்க் பற்றி ப்ராஜெக்ட் மேனேஜரிடம் சொல்லிவிடு. உனக்கு தேவையான அரேன்ஜ்மென்ட்ஸை ஆடிட்டர் செய்வார்." மகேஸ்வரன் எழுந்து கொண்டார்.
மீட்டிங் முடிந்து விட்டது என்று புரிந்து கொண்டு அனைவரும் வெளியேறினர். ரஞ்சன் மற்ற