(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அப்பா அம்மா உறவினர்கள் என்று யாருடனும் அவன் நேரம் செலவு செய்தது இல்லை. அவன் பேச வேண்டும் என்று நினைத்தால் ராமுவை தான் தேடி செல்வான். ராமு மட்டும் தான் ராகவ்வை பேச விட்டு கேட்பார். ஏனோ அவரிடம் ஓர் வசிகர சக்தி இருக்கிறது. அதனால் தான் நான் அவரை தேடி செல்கிறேன் என்று அடிக்கடி ராகவ் நினைத்தது உண்டு.

 அவன் அப்பா அம்மா என்று மகிழ்ச்சியாக பேசச் சென்றாலும் அவர்கள் அவனிடம் படிப்பு பிசினஸ் என்பதை தவிர வேறு எதையும் பற்றி பேசியதில்லை. அப்பாவை நேரில் பார்ப்பதே அபூர்வமாக தான் இருக்கும். கேட்டதை வாங்கி கொடுப்பார்கள். ஆனால் நண்பர்களிடம் கூட பேச அனுமதித்தது இல்லை‌. நண்பர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதை உணர்ந்தவன் மற்றவர்களிடம் பழகுவதையும் நிறுத்திக் கொண்டான்.

 அவன் செய்யும் எல்லா காரியங்களிலும் பெற்றவர்கள் என்ற போர்வையில் இருக்கும் புஷ்பா பிரதாபன் இவர்களின் விருப்பம் தான் இருக்குமே தவிர ராகவ்வின் விருப்பத்தின்படி எதுவும் நடந்ததில்லை.

 முதன்முதலாக அவர்கள் விருப்பத்தை கேட்காமல் அவன் விரும்பியதை செய்தது குயிலி விஷயத்தில் மட்டும் தான். அவன் கண்முன் குயிலின் முகம் தோன்றி மறைந்தது. அவன் முகத்தில் ஒரு வலியும் தோன்றியது.

 பேசிக் கொண்டே இருந்தவன் திடீரென்று அமைதியானது கண்ட பிரதாபன் கவனிக்க அவன் முகத்தில் தோன்றி மறைந்த வலியையும் கண்டுகொண்டான்.

 ராகவ்... திடீரென்று என்ன யோசனை.

 ஒன்றும் இல்லை அப்பா... பிசினஸ் அரசியல் பொழுதுபோக்கு என்று எல்லாவற்றையும்அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்ட நான் அந்த குள்ள வாத்திடம் தோற்றுப் போய் விட்டேனே... அந்த வலிதான் என்று சொல்லும்போதே அவன் குரல் அடைத்தது. நல்லவேளை அம்மா சரியான நேரத்தில் என் கண்களை திறந்து விட்டார்கள். இல்லை என்றால் கண்ணிருந்தும் குருடனாகவே இருந்திருப்பேன் என்று சொல்லி அவன் மீண்டுமாக இயல்பாக பேச ஆரம்பித்தான். அவன் கண்டுகொள்ளாத விதமாக பிரதாபன் சத்யா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

 சிறிது நேரத்தில் சத்யாவிற்கு அழைப்பு வர அண்ணா... இந்த மல்லி அழைத்துக் கொண்டே இருக்கிறாள் நாளை மீண்டும் சந்திக்கலாம் என்று கூறி விட்டு புறப்பட பிரதாபன் இருவரும் ராகவ்வின் பிசினஸ் பற்றி பேசினார்கள்.

 ராகவின் பிசினஸ் பற்றிய அனைத்து விவரங்கள் டாக்குமென்ட்களை பற்றி பிரதாபன்

21 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.