(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தெளிவாக கேட்டு தெரிந்து கொண்டான்‌.

 சென்னை.... 

சென்னை பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த ஆசீர்வாதத்திற்கு அடிமனதில் தன்னை எதிரிகள் தேடி வருகிறார்கள் என்று ஒருவித உணர்வு தோன்ற அந்த பஸ் அடுத்ததாக நின்ற நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டார். யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்தவர் யாரும் பின் தொடர்ந்து வரவில்லை என்று உறுதி செய்து கொண்டவர் அருகில் ஏதாவது டாக்சி ஸ்டாண்ட் தெரிகிறதா என்று தேடினார்.

சற்று தொலைவில் ஒரு டாக்சி ஸ்டாண்ட் இருப்பதாக தெரிந்து கொண்டவர் நேராக அங்கு சென்று சென்னை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.

ஆசீர்வாதம் டாக்சியில் ஏறி செல்வதை பிரதாபன் ஆட்களில் ஒருவன் பார்த்து விட்டான். எனவே அந்த காரை பாலோ செய்ய ஆரம்பித்தார்கள்.

 டாக்சி டிரைவர் தவிர ஆசீர்வாதம் மட்டுமே அந்த காரில் அமர்ந்து இருக்க திடீரென்று அந்த கார் யாரும் எதிர்பார்க்காத விதமாக விபத்திற்கு உள்ளானது.

கண்மூடித் திறப்பதற்குள் அனைத்தும் நடந்து விட முடிந்துவிட காருக்கு மட்டும் சேதம். டிரைவருக்கு சிறிது அடி என்று சொல்லிவிட்டு அவனை ஒரு சிலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மயக்க நிலையில் இருந்த ஆசீர்வாதத்தை தண்ணீர் தெளித்து சுற்றி இருந்த மக்கள் எழுப்பி விட்டார்கள்.

 வயது முதிர்ந்தவர் என்பதால் கண்முன்னே விபத்து நடந்த அதிர்ச்சியோடு அவர் முன்னந் தலையில் அடிபட்டு இருக்க அவரால் எதையும் புரிந்துகொள்ள முடியாமல் மீண்டும் மயங்கி சரிய அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் இவரை நாங்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சொல்லி தங்கள் காரில் அழைத்து சென்றனர். உடன் இருந்தவன் ஆசிர்வாதத்தின் கையில் இருந்த பையை வாங்க முயல அவர் மயக்க நிலையில் இருந்தாலும் அவர் கை பையை இறுக்கி பிடித்து இருந்ததால் அவனால் பையை வாங்க முடியவில்லை. 

தாத்தா... இப்போ கூட உடும்பு பிடியை விடவில்லை என்று கூறி சிரித்தவன் பையின் ஷிப்பை திறந்து அந்த பைலை படித்து விட்டு உடனிருந்தவனிடம் கொடுத்து படிக்க சொன்னான். அதை படித்து முடித்தவன் இந்த பைல்க்காக உயிரையே விட தயாராகி விட்டாரே என்றவன்..... வெற்றி என்பது போல ஸ்மைலியுடன் நாங்க வந்து கொண்டு இருக்கிறோம் பாஸ் ஆசிர்வாதத்தோடு என்று டெக்ஸ்ட் மெசேஜ் செய்தான்.

மூணார்...

மூணாரை சென்றடைந்த குயிலி பாரஸ்ட் ஏரியாவிற்கு செய்வதற்காக தனியாக அனுமதி

21 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.