(Reading time: 11 - 21 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

பெற்றுக் கொண்டு ஒரு காரில் பாரஸ்ட் ஏரியாவை நோக்கிய பயணத்தை தொடங்கினாள். சுற்றி சுற்றி வளைந்து நெளிந்து செல்லும் அந்த பகுதியில் அவள் குறிப்புகளில் இருப்பதுபோல மலைகள் உள்ளதா என்பதை கவனித்துக் கொண்டே வந்தவள் திடீரென்று ஒரு திருப்பத்தில் காரை நிறுத்துமாறு கேட்க டிரைவரும் அந்த இடத்தில் காரை நிறுத்தினான்.

 நீங்கள் மேலே சென்று விட்டு திரும்பி வாருங்கள். நான் மீண்டும் இதே இடத்தில் காத்திருக்கிறேன் என்று கூறி அவரிடம் கொஞ்சம் பணங்களை கொடுத்துவிட்டு சற்று தொலைவில் இருந்த மலை நோக்கி நடக்க தொடங்கினாள்.

மேம்... நான் இந்த இடத்திற்கு திரும்ப எவ்வளவு நேரத்தில் வர வேண்டும்.

 எவ்வளவு நேரம் ஆகுமோ என்று தெரியாதவள் நீங்கள் மேலே போய் விட்டு திரும்பி வர எவ்வளவு நேரம் ஆகும்.

குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும் மேம்...

ம்ம்.. அப்படி என்றால் நீங்கள் மேலே போய் சுற்றி பார்த்து விட்டு வாருங்கள். நான் ஒரு மூன்று மணி நேரம் கழித்து இந்த இடத்திற்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு நடந்தாள்.

 அந்த பாறையில் குறிப்பு தாளில் இருப்பது போல சிவப்பு நிற அடையாளம் தெரிந்தது.

 ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் சென்றவள் அந்த சிவப்பு நிற அடையாளத்தை பின் தொடர்ந்து நடந்தாள்.

அந்த சிவப்பு நிற அடையாளம் ஒரு குகைக்குள் செல்ல அவளும் குகைக்குள் சென்றாள்.

இந்த குகைக்குள் என்ன ஆபத்து எல்லாம் காத்திருக்கிறதோ என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்தது போல ஆபத்து இல்லை. வெகு எளிதாக கண்டுபிடித்து விட்டாள்.

அங்கு பாறையின் இடுக்கில் பாறை நிறத்தில் பாறை போலவே இருந்த ஒரு இரும்பு பெட்டியைக் கண்டுக் கொண்டவள் அதை எடுத்தாள். அதில் நம்பர் லாக் செய்யப்பட்டு இருந்தது.

நான்கு டிஜிட் நம்பர் என்னவாக இருக்கும் என்று யோசிக்க இரண்டு முறை தவறான நம்பரை முயற்சி செய்து விட்டாள். அதனால் இந்த முறை தவறு செய்து விடக்கூடாது என்று நினைத்து கொண்டே யோசித்தவள் கார்த்திக் பர்த்டே ஆக இருக்கலாமே என்று ஏப்ரல் 2 என்பதை 2489 என டைப் செய்தாள். அவளுக்கு மேலும் தொல்லை கொடுக்காமல் சமர்த்தாக திறந்து கொண்டது பெட்டி.

பெட்டியை திறந்தவள் உள்ளே இருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள். எல்லாம் விவசாயம் சம்பந்தப்பட்ட தேடல்களாக இருக்க இதெல்லாம் சாத்தியமா என்று யோசித்து கொண்டே

21 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.