(Reading time: 17 - 34 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

விடுவான்.

ஆனால் இப்போது அவன் சிக்கிக் கொண்டானே… வாளை உயர்த்தியவள் சண்டமாருதமாக  ஓங்காரமிட்டு மின்னல் வெட்டாக வாளை வீசினாள்.

'ஐயோ' என்ற அலறலுடன் அவன் கதை முடிந்து போனது.

குழலியின் ஆவேசத்தை அடக்குவதுபோல அவளுக்கு இடுப்பு வலி எடுக்க ஆரம்பித்தது. சம்மட்டி கொண்டு அடிப்பது போன்ற வலி தொடர்ந்து வரஅதன் உச்சகட்டத்தில் மயங்கிப் போனாள்.

மயக்கம் தெளிந்தபோது பூங்காத்தம்மன் சிரித்த முகத்துடன் அருகில் அமர்ந்திருந்தாள். அவளுடைய கரங்களில் இளம் தளிரென குழந்தை கைகாலை உதைத்து துள்ளியபடி இருந்தது. அவள் அருகில் பிள்ளையை கிடத்தியவள்..

"குழலி நீ உன் வாக்கை காப்பாற்றி விட்டாய். நான் உனக்கு ஒரு வாக்கு தருகிறேன். உன் குலம் காக்கும் பொறுப்பையும் நானே எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். இங்கேயே இருங்கள். காடு நாடாகும் காலம் வந்து விட்டது. அந்த நாட்டிற்கு அரசனாக அரசியாக உங்களை நியமிக்கிறேன்."

அனைத்தையும் சொன்னவள் கடைசியாக வாழ்த்தினாள்

"நயனிலன் குலம் வாழ்க"

"ஆவ்தாயே நயனிலன் என்பது ஆகு பெயர்தான்"

"இருக்கட்டுமேசொல்லும்போது அழகாக இருக்கிறது…" என்று சொல்லி மறைந்தாள்.

பிறகு அன்னையின் வாக்குபடி… அந்த இடம் பூங்காவனம் ஆகி குறுநிலமாகியது. அதற்கு அரசனாக இளமாறன் இருந்தான். பூங்காத்தாளின் அருளால் அவர்களுடைய குலம் வழிவழியாக செழிக்க தொடங்கியது.

"அது சரி அந்த கங்காலன் யார்…" கதை கேட்ட பரிவார தேவதை பூங்காத்தாளிடம் கேட்டது.

"அவன்தான் மதுரமாயன். நயனிலனை அழிக்க பிறப்பெடுத்து வந்துள்ளான்."

"இப்போதா…"

"இளமாறனையும் கார்குழலியையும் பழியெடுக்க அவன்

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.