(Reading time: 17 - 34 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

அவை பயன்படாது. புதிதாக வாணிபம் தொடங்கி வாழ்க்கையை நடத்த முடியுமா…'

"முடியாதுதங்களுக்கு இளகிய மனம். அனைத்தையும் இலவசமாகவே தந்து விடுவீர்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் கத்தி பிடித்துதான் பழக்கம்அதை விடுத்தால் சமையல் தெரியும். ம்நாம் யாத்திரிகர்களுக்கான உணவுக் கூடம் தொடங்கலாமா.."

"அப்புறம் அது அவர்களுடைய கடைசி யாத்திரை ஆகி விடாதாநீ சமைத்த உணவை உண்டு நான் இதுவரை உயிருடன் இருப்பதே பெரிய ஆச்சரியம்.." அவன் இதழிடையில் சிரிப்பை மறைத்து இயம்பினான்.

"கேலி செய்கிறீர்களா.. பாவம் நம் கணவன் கவலையில் இருக்கிறானே என்று ஆலோசனை தந்தால்... ஆதரித்து பேசாமல்….  நயனிலன் என்பது சரியாகத்தான் இருக்கிறது." அவள் சிலுப்பிக் கொண்டாள்.

அவ்வாறு இருவரும் பேசிக் கொண்டே உறங்கியும் போனார்கள். நடு இரவில் ஒரு பெண் அழும் குரல் கேட்டு குழலி திடுக்கிட்டு விழித்தாள். உறக்கத்தில் இருந்த இளமாறனையும் எழுப்பினாள்.

"எழுந்திருங்கள்இங்கு யாரோ அழுது கொண்டு இருக்கிறார்கள்…"

குழலியின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்து இளமாறன் கண் விழித்தான்.அனிச்சையாக அவன் கை வாளை பிடித்தது.

"யார்எதற்கு அழுகிறார்கள்?" என்று கேட்டபடி சுற்றும் புறமும் நோக்கினான்.

"யாரது..?" என்று உரத்து குரல் தந்தான். அவனுக்கு எந்த குரலும் கேட்கவில்லை.

"அதோ அந்த பக்கத்திலிருந்துதான் அழும் குரல் கேட்கிறது…" குழலி உட்பகுதியை நோக்கி கை காட்டினாள்.

"இல்லை குழலி எனக்கு எதுவும் கேட்கவில்லை'

"என்னுடன் வாருங்கள்…" அவள் எழுந்து கணவனின் கைபற்றி இழுத்தாள். யோசனையுடன் மறுபேச்சு பேசாமல் அவன் நடந்தான்.

"பார்த்தாயா.. இங்கே யாரும் இல்லை…" உட்பகுதியை பார்வையிட்டவன் சொன்னான்.

"என் கண்ணுக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த குரல்

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.