(Reading time: 17 - 34 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

இல்லாதபோது நாவடக்கம் இல்லாமல் போவதாக கேள்விபட்டேன்."

"தாங்கள் ஒற்றர்கள் வேவு பார்க்கும் பட்டியலில் கார்குழலியும் இருக்கிறாள் போல…"

"இதென்ன பழிஇல்லாளை ஒற்று பார்க்கும் அறிவிலியா நான்ம்நொடிக்கு நொடி பழிச்சொல் கூடுகிறதேஇசைபட வாழ்தல் தமிழன் பண்பாடு.. இப்படி வசைபட வாழ வைக்கிறாயே.."

"ஆஹாங்.. அப்படி என்ன வசை பாடினேனாம்?"

"பாடவில்லையம்மாஎழுதி வைத்திருக்கிறாய்.."

"எங்கே…"

"ஒருவனை ஓவியமாக அழகாக வரைந்து  அதில் வசை மொழியை தலைப்பாக வைப்பது தமிழ்குல பெண்ணின் பண்பா.."

"வசை மொழியா?"

"நயனிலன் என்று எனை பற்றி எழுதியிருக்கிறாய்"

"உண்மைதானேஅது தங்களுக்கு சாலப் பொருந்தும்'

"இறைவாநாளொருபொழுதும் நெறி காக்க வேண்டி நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் எனக்கு இந்த பெயர் தவறல்லவா? அரசரே எனக்கு ஊர் நியாயம் செய்யும் நாட்டார் பதவி வழங்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார்.."

"ஊருக்கு நியாயம் செய்வது வேறு இல்லகிழத்திக்கு செய்யும் நியாயம் வேறு.. தலை பிள்ளையை தாங்கி நிற்கும் தலைமகளை தனியே தவிக்க விட்டு செல்வது நியாயமாஇல்லைதானேஅதனால்தான் நயம் இல்லாத தங்களை நயனிலன் என்று அழைக்கிறேன்."

"தலைப்பிள்ளை தலைமகள்தவிக்க விட்டு.. அடடா.. நான் இவ்வளவு பெரிய குற்றத்தை செய்திருக்கிறேனா…? " அவன் புருவம் சுருக்கினான்.

"ஆம்இனியும் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை எனில் இந்த பெயரே நிலைத்து விடும்.."

"அதனால் என்னவாகுமாம்…"

"அனுதினமும் தாங்கள் வருந்துவீர்கள்"

"அப்படியா ஒரு முறை அழைத்துதான் பாரேன்"

"தங்கள் உத்தரவு பிரபோ. இப்போதே சொல்கிறேன்நயனிலன்

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.