இப்போநுதான் முதல்முறையாக ஒரு டெட்ராகுரோமேட்டை பார்க்கிறேன்.. குட்.. நீ சொன்ன கம்ப்ளைன்டை ஒப்புக்கறேன். உன்னோட நஷ்டத்தை சரி செய்யறேன். ப்ளஸ் பணமாகவும் காம்பன்ஷேஸன் தர்றேன்."
மயூரி ஆச்சரியமாக பார்த்தாள். அவள் சொல்வதை புரிந்து கொண்டாரா…! பலருக்கு அது புரியாமல் அவளை கலர் ப்ளைன்ட் என்று சொல்லுவார்கள்...
"மயூரி… உனக்கு டைம் கிடைக்கறப்போ வாம்மா. ஐ ஹாவ் எ ப்ளான். நாம டிஸ்கஸ் பண்ணலாம்" அவர் தெரிவித்தார்.
"கண்டிப்பா சார்…" நன்றி தெரிவித்து மயூரி கிளம்பினாள். அவளுடன் நடந்த ஹைந்தவி சைத்ரனை பார்த்து முறைத்தபடி சென்றாள்.
'கேஸ் விஷயமாதான் பேசுவியாடா… அப்புறமா பார்த்துக்கறேன்… ஒரு கொலை முயற்சி கேஸை பத்தி பேசலாம்டா..'
அவர்கள் செல்லவும் சட்டென்று சைத்ரன் எழுந்தான்.
"ஒரு க்ளைன்ட்டை பார்க்கனும் டாட் நான் வர்றேன்"
"எப்படி இருந்தாலும் வீட்டுக்கு வந்தாகணும்ல… சாயந்திரம் க்ளைமாக்ஸை பார்க்க போற…" ராம்குமாரும் மிரட்டினார்.
"ஈஸி டாட்… நான் என்ன விஷயம்னு விசாரிச்சு சொல்றேன்" மித்ரனும் எழுந்தான்.
தம்பியுடன் பேசிக் கொண்டே நடந்தாலும் மித்ரனுக்குள் மயூரியை பற்றிய தேடல் இருந்தது. அவள் யார்…!
சட்டென மனதில் மின்னல் வெட்டியது… அந்த மிலிட்டரி ஆஃபிசர் ஜ்வாலேஷ் மேத்தாவின் கேஸில் இந்த பெண்ணும் இருக்கிறாளே… அவருடைய ஃபைலில் மயூரியின் புகைப்படத்தை பார்த்திருக்கிறான். அதுவும் மோசமான குறிப்போடு…!
அவருடைய காதலி என்றும்… அவளை பார்க்கவே அடிக்கடி சென்னைக்கு வந்ததாகவும்.. கடைசியில் அவர் காணாமல் போனதும் சென்னையில்தான் என்றும் இருந்ததே… பணத்துக்காக வயதானவருடன் பழக்கமா..?
சை… ! மயூரியின் முகம் கசந்து வழிந்தபடி அவனுடைய ஆழ்மனதில் இடம்பிடித்தது.
(தொடரும்)
Next episode will be published on 8th Dec. This series is updated weekly on Tuesday evenings.
Go to Nesam nalgum nayanilan nencham story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.