இருப்பவன்... சிறுவயதிலிருந்தே நான் வளர்த்து இருந்தாலும் இவனது குணநலன்கள் நிச்சயம் நம்மை போல் இருக்காதே. தைரியம் படைத்த நற்குணங்கள் கொண்ட அவர்களோட பிள்ளையாயிற்றே... அவனுடைய அம்மாவை கொன்றது நான் தான்.
அவனோட இருந்து கொண்டு அவனை வைத்து அவர்களை அழிக்க நாம் பிளான் போட்டுக் கொண்டிருக்க நம்மோடு இருந்து நம்மை அழிக்க அவன் திட்டம் தீட்டி இருக்கிறானோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது சத்யா. அதுமட்டுமில்லை சத்யா... இன்றைக்கு காலையில் இருந்தே அவன் முகம் முழுவதும் எதையோ வென்று விட்ட மகிழ்ச்சியில் திளைக்கிறது. அதையும் தாண்டி அவன் மனதில் ஒரு கவலையும் அவனை வருத்திக் கொண்டிருக்கிறது என்பதும் புரிகிறது.
அவன் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதில் கை தேர்ந்தவன் என்றாலும் சிறு வயதிலிருந்தே அவனுடன் இருந்து அவனை வளர்த்தவன் ஆயிற்றே... அவனது சிறு மாற்றமும் எனக்கு புரிகிறது. ஏன் இந்த சந்தோஷம்... ஏன் இந்தக் கவலை என்று தான் புரியவில்லை சத்யா...
நமக்கு எதிராக அவன் திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பில்லை. ஏதாவது காதல் விவகாரமாக இருக்கலாம். அதனால்தான் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து வர்ணித்துக் கொண்டிருக்கிறானோ என்னவோ.. அது எப்படியோ போகட்டும்.. நமக்குத் தேவையானது நமக்கு கிடைத்தால் போதும். நீங்கள் வீணாக கவலைப்படாதீர்கள் அண்ணா.. நாம் தான் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக செயல்படுகிறோமே..
கவனமாக இருக்கிறோம் தான்... ஆனால் அப்படி கவனமாக இருந்தும் ராமுவை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையே. அது தான் மிகவும் குழப்பமாக இருக்கிறது.
ராமுவா... அவனை சமாளிக்க வேண்டிய அவனை பராமரிக்க வேண்டிய செலவு மிச்சம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியது தான். எங்கு போய் செத்து ஒழிந்தானோ தெரியவில்லை...
செத்து போயிருந்தால் பிரச்சனை இல்லை தான்... ஆனால் எங்காவது மறைந்திருந்தால்.
ஐந்து நிமிடத்தில் அவன் எப்படி மறைந்திருக்க முடியும். நம் வீட்டிற்கு வந்த நாளிலிருந்து அவனை எதற்கும் வெளியே அனுப்பவில்லை. வீட்டிலேயே இருந்து தப்பிக்கவும் முடியாது.அவனை வெளியே அனுப்பியது ராகவ் தான். ஆனால் அவனை அனுப்பி அடுத்த ஐந்து நிமிடத்தில் நம்மாட்கள் அவனை தேடி சென்று விட்டார்கள். ஏன் அப்படி இருந்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை... என்ன நடந்து இருக்கும்.
அதுதான் எனக்கும் குழப்பமாக இருக்கிறது அண்ணா... என்னவாக இருக்கும்.
சத்யா இந்த பெர்முடா முக்கோணத்திற்கு ராமுவையும் அழைத்து செல்ல வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்.
Ragav ku ellam nabagam vanducha nadikrano
Kuzhi thatha epdi thapipanga waiting to reaf
Indha situation la kuda nama brave soul oda action semma 👌👏👏👏 but thatha sodhapitare
Kuyili and thath's escape avangala??? Ramu ji aap kidhar ji ( enga irukinga) look forward to see what happens next.
Thank you and keep rocking.
Eagerly waiting for next epi.. pls post it soon