கோவை
”ஒரு பக்கம் பாட்டி இன்னொரு பக்கம் மானஸா இப்போ திடீர்னு தாத்தா வேற, ராமுக்கு கொடி பிடிக்கறாரே இவரேதான் சொன்னாரு ராம் வேணாம்னு இப்ப இவரே இப்படி சொல்றாரு நான் என்னதான் செய்வேன்னு தெரியலையே சரி ராம் பேசினது போதும் இவனை பேக் பண்றது பெட்டர் என நினைத்தவன்
ராமிடம்
”ராம் எல்லாருக்குமே சம்மதம்னு முடிவாயிடுச்சி இனி என்ன நாளைக்கே வேலையை ஆரம்பிக்கலாம் இப்ப நீங்க கிளம்புங்க ராம் நாளைக்கு நான் உங்க மில்லுக்கு வந்து சந்திக்கிறேன்”
”பரவாயில்ல வசீ நானே நாளைக்கு லாயரோட வந்து உங்களை பார்க்கறேன். பாட்டி தாத்தா நான் கிளம்பறேன் மானஸா நாளைக்கு காலையில நான் இங்க இருப்பேன் ரெடியாயிடுங்க நாளைக்கு நான் உங்களை என் மில்லுக்கு கூட்டிட்டு போய் சுத்தி காட்டறேன்” என கூறிவிட்டு சென்றுவிட்டான்.
மானஸா பாட்டியிடம்
“பாட்டி ராம் பேசறத பார்த்தீங்களா எவ்ளோ நல்லா பேசறார்ல எனக்கும் மூணாவது ஆள் கிட்ட பேசற மாதிரியே இல்லை, ரொம்ப நாளா பழகினவர் கூட பேசின மாதிரியே ஒரு பீலிங்” என அவள் சொல்ல வசீயின் நடுமண்டையில் யாரோ பெரிய ஆணியை இறக்கியது போல் வலிக்க அவன் மானஸாவிடம்
”மானஸா ரூம்க்கு வா நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”
”இருங்க வசீ நான் பாட்டிகிட்ட பேசிக்கிட்டு இருக்கிறேன்ல”
”நான் உன் கிட்ட முக்கியமா பேசனும் இப்ப வர்றியா இல்லையா” என கத்த அவளும் கோபத்துடன்
”ஏன்தான் என்கிட்ட இப்படி கோபமாவே நடந்துக்கிறீங்களோ சே உங்களுக்கு ராம் மாதிரி அமைதியா நல்ல விதமா பேச வராதா” என திட்டிவிட்டு ரூமிற்கு சென்றாள்.
வசீ கோபத்துடன் அவள் பின்னாலே ரூமிற்கு சென்று கதவை சாத்தினான் கோபமாக
”எதுக்கு இப்ப கதவை உடைக்கறீங்க வசீ இந்த வீடு என் பேர்ல இருக்கு இங்க இருக்கற ஒவ்வொன்னும் எனக்குதான் சொந்தம் இப்படி அழகாயிருக்கற கதவை உடைச்சிடாதீங்க” என கோபப்பட
”ஏண்டி நான் யார் உனக்கு”
”ஏன் அதுக்குள்ள மறந்துட்டீங்களா”
”மறந்தது நான் இல்லை நீதான்”
”நானா என்ன சொல்றீங்க”
”பின்ன என் கண்ணு முன்னாடியே அந்த ராம்கிட்ட சிரிச்சி பேசற வெட்கமாயில்லை“
”நான் ஏன் வெட்கப்படனும் நீங்க தானே அவரை கூட்டிட்டு வந்தீங்க நமக்கு அவர் நல்லது செய்யதானே வந்தாரு அவர்கிட்ட போய் கோபமா பேச சொல்றீங்களா“ என கத்த
”இப்ப எதுக்கு என்கிட்ட கத்தற”
நான் வாசித்த சில்சி கதைகளில் மிகப்பெரியய அப்டேட்களுடன் வந்த ஓரே கதை இதுதான். முடிவு அடுத்த வாரம் என்பதுதான் நம்ப முடியலை