(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

சரி மங்க அந்தக் குட்டிக்கு என்ன விதியோ அப்புடுதே இருக்கு.....

இவர்கள் பேசியதில் அந்த சிறுவனுக்கு என்ன புரிந்ததோ ஆனால் தான் வந்ததிலிருந்து திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும் அந்த சிறுப்பெண் தன் வீட்டிற்கு வரப்போகிறாள் என்று மட்டும் புரிந்தது.

நானும் கார்த்தியு வூட்டுக்கு கிளம்புறோ..... ஆத்தாகிட்ட பேசி புட்டு விஷயத்த நாள கால சொல்றே மங்க..... வூட்ட சாத்திக்கிட்டு சூதானமா இருங்க......

சரிங்க பார்த்து போயிட்டு வாங்க......

திடீரென்று கார்த்திக் தன் அன்னையை கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்க......

இப்பொழுதுதான் கார்த்திக்கின் நினைவு மங்கைக்கு வந்தது. ஏனென்றால் அவன் அம்மா செல்லம் அம்மா இல்லையென்றால் வீட்டையே இரண்டாக்கும்படி ஆர்பாட்டம் செய்வான்.அப்படி இருப்பவன் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்ததே னைவருக்கும் ஆச்சர்யம்தான். இப்பொழுது பழைய குருடி கதவ தொறடி ன்பதுபோல் ரம்பித்துவிட்டான். இனி இவனை சமாளிப்பது கஷ்டம் தான்.

ஏ(ன்) ராசா ஏ அழறீங்க....

அவன் கண்ணீருடன் அவன் அன்னையை பார்த்து மீண்டும் அழ......

அவன் கண்ணீரை தொடைத்து விட்டு சிகையை சரி செய்தபடியே ,

என்னாச்சு என் தங்கத்துக்கு பசிக்குதா கண்ணு....

அவன் அம்மாவின் கழுத்தில் தலைவைத்து இல்லையென்பது போல் தலையாட்ட......

இதனை கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறு பெண்ணை அப்பொழுது தான் கவனித்தான்.

இவனையே அவள் பார்த்துக்கொண்டிருக்க.....

இவனும் அவனது கண்ணீரை துடைத்துக் கொண்டு அவளை நோக்கி ஏன் அழுகிறாய் என்பது போல் சைகை செய்ய.....

தனக்கு ஆறுதல் கிடைத்த சந்தோஷத்தில், அவள் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை ஆட்டி கண்ணீரை தன் இரு பிஞ்சு கைகலாலும் துடைத்து கொண்டு சிறு புன்னகை புரிய.....

ஆம் இதுவரை பெரியவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்களே தவிர இவளை ஏன் அழுகிறாய் என்று யாரும் கேட்கவில்லை. அதனால் அவளுக்கு கார்த்திக்கை மிகவும் பிடித்து விட்டது.

கார்த்திக்கின் அடம் புரிந்த வெங்கடாசலம் பைய இங்கேயே இருக்கட்டும் நான் போய்க்கிட்டு நாள காலை வாரேன் புள்ள....

சரிங்க.....

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.