அடிச்சிடுவே… அம்மாவை பார்த்தால் பம்மிடுவே… மொத்த ஊரும் வந்து நின்றால் ஓடியே போய்டுவே.. ராஸ்கல்… உனக்கெல்லாம் நான் டூ மச்."
"ஆவ்… அப்படி பேசக்கூடாது.."
"இன்னும் மோசமா பேசிடுவேன். காதுல ரத்தம் வந்திடும். போனை வச்சிட்டு ஓடிப் போயிடு. சீட்டிங் ஃபெல்லோ"
"ஓ… நோ… ஹைடி.. உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம்…"
"எனக்கு டைம் இல்ல. உன்னை மாதிரி ஈ ஓட்டிட்டு இருக்கேன்னு நினைச்சியா.. ஐம் ஆன் ட்யூட்டி… போலீஸ்கிட்ட மரியாதை இல்லாம நடந்துகிட்டேனு உள்ளே தள்ளிடுவேன். இத்தோட விட்டுடு…" அவள் தொடர்பை துண்டித்தாள்.
வந்துட்டான் வெள்ளை கொடியை தூக்கிகிட்டு… பல்லை கடித்து வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
அவள் பணியாற்றும் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனியறையில் அவளுடைய முழு யூனிஃபார்மிற்கு மாறினாள். அலைபேசி செல்லமாக சிணுங்கி ஓய்ந்தது… மெஸேஜ்?
எடுத்து பார்த்தாள். சைத்ரனிடமிருந்து வந்திருந்தது…
'இனி உன்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க மாட்டேன். நீயாக அழைத்தால் மட்டுமே பேசுவேன் உன்னுடைய அழைப்பிற்காக வேதனையுடன் காத்திருக்கும் சைத்ரு...
மிரட்டலா… அப்படியே பயந்துட்டேன் பார்… இருக்கற டென்சன்ல இவன் வேற பியானோல முகாரி வாசிக்கறான்… அலுப்புடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
"என்ன மேடம் இங்க வந்து யூனிஃபார்ம் மாத்தறீங்க?" ஏட்டு வசுதா கேட்டாள்.
"காலைல வேற ஒரு இடத்திற்கு போயிருந்தேன். பர்சனல் வேலைப்பா… யூனிஃபார்மோட போறது சரியில்லை. அதனால இங்க ட்ரஸ் மாத்த வேண்டியதாகி விட்டது." அவள் சொன்னாள்.
"மேடம் இன்னிக்கு புது ஏஎஸ்பி நம்ம ஸ்டேஷனை விஸிட் பண்றதா தகவல் வந்துருக்கு" ரைட்டர் மீனா தெரிவித்தாள்.
"சரி… இன்ஸ்பெக்டர் மேடம் வந்துட்டாங்களா.."