(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

அதுலதான் கதிர் சார் - அ எவ்ளோ லவ் பண்றான்னு புரிஞ்சுகிட்டேன்.  பட் நானா அவகிட்ட கேட்டது இல்லை. ஆபீஸ் மேட்டர் பேசுறப்ப கதிர்  சார்  கதிர் சாருனு உருகி பேசுவா.....எனக்கே அவ்வளவு ஆர்வம் ஆயிடுச்சு. அதான் உங்க கம்பேனி வேக்கன்சி வந்தோன அட்டெண்ட் பண்ணிடேன்.

ஓ..... அப்ப அந்த ஸ்கூல்...

அது டெம்ப்ரவரி ஸ்டாஃப் தான் சார் நான் B.Ed முடிக்கல, இடையில நல்ல வேலை கிடைச்சா போயிடுவேன் சொல்லிதான் ஜாயிண்ட் பண்னேன் சார்.

அவன் சிறு தயக்கத்துடன் சாரி அன்னைக்கு அப்படி நடந்துகிட்டதுக்கு.

அவள் சிறு சிரிப்புடன் இட்ஸ் ஓகே சார், நீங்க தேடி வந்தவங்க கிடைச்சுடாங்களா???

கிடைச்சுட்டாங்க... ஆனா இன்னும் பேசல,

ம்ம் ...யார் அவங்க.... எதுக்கு அவங்கள தேடுனிங்க.  அவங்க பேரும் தேன்மொழியா????

நாம இன்னும் அந்தளவுக்கு கிளோஸ் ஆகும்னு நினைக்கிறேன். (எப்புடி எங்களுக்கும் பேச தெரியும்ல)

அவனை மெச்சம் ஒரு பார்வை பார்த்தவள் யு னோ வாட் சார். எனக்கு ஆல்ரெடி உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி நியாபகம் அதான் கேட்டேன் சாரி.

சரி ஓகே தேன்மொழி. நீங்க அனிதா அம்மாகிட்ட நாங்க வரதா சொல்லி வைங்க. இது அரேஞ்ச் மேரேஜ் மாதிரி பண்ணிறலாம்.

தேங்க் யூ சார்.

யுவர் வெல்கம் பாய்.

பாய் சார்

கதிர் கார்த்திக்கிற்கு 30 ஆவது முறையாக அழைக்க...... கார் கதவைத் திறந்தவுடன் கைபேசியை கண்டவன் அச்சோ இவன் கிட்ட சொல்லாம போய்ட்டேனே போச்சு... போச்சு...கால் -லை அட்டன்ட் செய்து காதில் வைத்தான்.

இடியட் எங்கடா போய் தொலைஞ்ச , எத்தனை வாட்டி கால் பண்றது. என் உயிர வாங்குறதுக்குனே எல்லாரும் இருக்கீங்களா...

மச்சான் சொல்றதை கேளுடா தேன்....

வாய மூடு முதல்ல. ஏதாவது இரிடேட்டிங் ரீசன் சொல்லாத, இன்னும் டென் மினிட்ஸ்ல இங்க இருக்க ரைட். சொல்லிவிட்டு காலை கட் பண்ணி விட்டான்.

இவனுக்கு இதேவேலை எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏராத்த மாதிரி இருக்கு என் பொழப்பு.

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.