(Reading time: 9 - 18 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

ன்னடி இது திடீர்னு மொத்த பர்ஸ்ட் இயர் ஸ்டூடெண்ட்ஸ் எல்லாரும் லேபுக்குப் படையெடுத்து வர்றாங்க? என்ற ரம்யாவின் கேள்விக்கு விடையாக, நம்ம முதல் செமெஸ்டர் எக்ஸாம் ரிசல்ட் வந்திருச்சு என்று பரபரவென குரல்கள் கேட்டது. ஒவ்வொரு கம்ப்யூட்டர் முன்பும் குழுமியவர்கள், அண்ணா பல்கலைகழக  ரிசல்ட் தளத்தைத் திறந்து, தங்கள் பதிவெண்களை உள்ளிட்டு ரிசல்ட் பார்க்க ஆரம்பித்தனர். ஆ ஓவென பல ஒலிகள் கேட்டன. ரம்யாவுக்கும் சிறிது பயம், முதலில் கண்மணியின் எண்ணைப் பார்த்தனர். எல்லாமே பாஸ், அறுபத்தியெட்டு சதவீதம் பெற்றிருந்தாள். ரம்யாவின் எண்ணை உள்ளீடு செய்தனர். அவளும் எல்லாமே பாஸ், ரொம்ப பயந்த இன்ஜினியரிங் மெக்கனிக்ஸ் கவிழ்க்கவில்லை. அறுபத்தி ஆறு சதவீதம் பெற்றிருந்தாள். கார்த்திக் எண்ணை அடுத்து உள்ளீடு செய்தாள், கார்த்திக் இன்ஜினியரிங் மெக்கனிக்ஸ் கிளியர் செய்திருந்தான், ஆனால் கணிதத்தில் கோட்டை விட்டுவிட்டான். கண்மணி ப்ச்! அரியர் முதல் செமெஸ்டர்லயே வச்சிட்டான். என்ன நான் ஜஸ்ட் மிஸ், எப்படியோ பாஸ் பண்ணிட்டேன் என்று சொல்ல, தினேஷும் எல்லாமே பாஸ் பண்ணிருக்கணும் என்று ஒரு குட்டிப் பிரார்த்தனை செய்தவள் நிமிர்கையில் தினேஷ் எதிர்வரிசையில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகில் கார்த்திக்கும் நின்றிருக்க, அவனைப் பார்த்த கண்மணி, தினேஷை சுட்டிக்காட்டி“ ஆல் பாசா?” என்று சைகையில் கேட்க, இல்லையென்று தலையசைத்தவன், நீங்க இருவரும் ?” என்பது போல் கேள்விகேட்டான்.

நாங்க  இருவரும் ஆல் பாஸ் என்று கண்மணி கைகாட்ட,, “தினேஷுக்கு எதுல போச்சு? என்ஜினியரிங் மெக்கானிக்ஸ் பேப்பரா என்றாள். இல்லை! அவனுக்கும் மேதமேடிக்ஸ் தான்! என்றான் கார்த்திக். அடப்பாவிகளா அரியர் வைக்கிறதுல கூட ப்ரெண்ட்ஷிப்பா! ஒன்னு போல ரெண்டு பேருக்கும் மேத்ஸ் பேப்பர் அவுட்டு! என்றவள், “ரம்யா! உன்னால தாண்டி சரியா படிக்காமல்  தினேஷ் அரியர் வச்சிட்டான்! போய் நீயே பேசு!” என்றாள். “ஏய்! நான் என்ன கண்மணி பண்ணேன்?” என ரம்யா கேட்கவும், “சும்மா நடிக்காத ரம்யா, எல்லாம் எனக்குத் தெரியும், இதெல்லாம் கடந்து தான் நானும் வந்திருக்கேன்!” என்றாள். “போ லூஸு! உன் பெர்மிஷன் முடிஞ்சு போச்சு, உன் சிக்னல்ஸ் லேபுக்கு ஓடு! என்றாள். ஆமா அத்தனை பேரும் இங்கே ரிசல்ட் களேபரத்தில் இருக்காங்க. நீ என்னை லேபுக்குப் போக சொல்லிட்டு இருக்க! ஒருத்தரும் அங்கே இருக்கமாட்டாங்க!” என்று சொன்னாள். பரபரப்புடன் கவிதா மேமும் அங்கே வர, ரம்யா நீ ஆல் கிளியர் தானே, நிறைய பேருக்கு மெக்கனிக்ஸ் பேப்பர் போச்சுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம கிளாஸ்ல எவ்வளவு பேருக்கு என்னன்னு தெரிஞ்சிக்கலாம்னு தான் வந்தேன் எனவும், மற்ற எல்லாரும் மேமை சுற்றிக் கூடி ரிசல்ட் பற்றி பேசலானார்கள்.

தினேஷ் சோகமாக இருந்தால் ஆறுதல் கூறுவது போல் பேச்சைத் துவங்கலாம். ஆனால் அவன்

8 comments

  • :thnkx: தோழி! ராபின்லாம் இப்போ ஒண்ணும் பண்ணமுடியாது :P கவலைப் படாதீங்க. ரம்யா மனசே வேற இப்போ!
  • நன்றி தோழி! வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி! :thnkx:
  • Robin bro idhu sequel!! kadhala jaika vaikathan this part 2 :dance: so free ya vidunga bro :P dairy milk and Miranda va feel pana vaikadhing 😍😍😍 arrears la kuda frndship kuttani ya 😱😱👌interesting update ma'am 👏👏👏👏 indha orthodox family ya miri ivanga love eppadi.jaikum nu parka waiting...<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.