(Reading time: 9 - 17 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

ஹா ஹா ஹா என்று எகத்தாளமாக சிரித்தவன் பிரசாத்திடம் கண்ணை காட்டினான். உடனே தான் கொண்டு வந்திருந்த பையை திறந்தவன் உள்ளே இருந்து பாமை எடுத்து வெளியே வைத்தான்.

மீண்டும் சிரிப்போடு பேச தொடங்கினான் பிரதாபன்... மிஸஸ் அன்ட் மிஸ்டர் சுரேந்தர், இந்த பாமை இங்கு ஆக்டிவேட் செய்து விட்டு நாங்கள் தப்பித்து விடுவோம். நீங்கள் மூவரும் இங்கிருந்து சாகப் போகிறீர்கள். ஆனால் எனக்கு தேவையான ஒன்றை நீங்கள் எனக்கு தரவில்லை... அது தான் அந்த ராணுவ ரகசியம்... அந்த ஃபார்முலாவை நீங்கள் சொல்லி விட்டால் நாங்கள் இங்கே இருந்து கிளம்பி விடுவோம் என்றான்.

அதை என்னால் எப்போதும் சொல்ல முடியாது என்று சுமித்ரா சொல்ல அப்படி என்றால் சித்ரவதைப்பட்டு உன் கண் முன்னே சாகப்போகும் உன் அன்பு கணவன் துடிப்பதைப்பார் என்று சொல்லி பிரசாத்தை பார்க்க அவன் அந்த பையில் இருந்து இன்ஜெக்ஸனை எடுத்து கொண்டு பிரதாபனை நோக்கி வந்தான்.

ஏய் சுமித்ரா... இப்போ இவனது நக இடுக்கில் இந்த ஊசியை இறக்க போகிறேன். அவன் வலியால் துடிப்பதை நீயும் பார் என்று சொல்ல பிரசாத் பேக்கை கீழே வைத்து விட்டு சுரேந்தர் அருகில் அவன் விரல்களை பிடித்தான்.

அங்கு நடப்பதை எல்லாம் கண்மூடிக்கொண்டே கவனித்து கொண்டு இருந்த கார்த்திக் தான் எதிர் பார்த்த நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தவனாய் நொடிப்பொழுதில் எழுந்து அருகில் கிடந்த பேக்கை கையில் எடுத்துக் கொண்டு பிரதாபனின் மூட்டில் தன் ஒரு காலால் ஓங்கி உதைத்து கொண்டே மறுகாலால் துப்பாக்கி இருந்த கையை ஓங்கி தட்ட தூப்பாக்கி மேல்நோக்கி பறந்தது. பிரதாபன் நிற்க முடியாமல் தரையில் விழுந்தான்.

மேலே சென்று கீழே இறங்கிய துப்பாக்கியை தன் மற்றொரு கையால் லாவகமாக பிடித்து கொண்டு நின்றான் கார்த்திக்.

அனைத்தும் கண்மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்து விட என்ன செய்வது என்று தெரியாமல் பிரசாத் விழிக்க தரையில் கிடந்த பிரதாபனோ ராகவ்... உன்னை விட மாட்டேன் என்று கத்தினான்.

நான் ராகவ் இல்லைடா... கார்த்திக் என்றான் தில்லாக...

கீழே விழுந்த பிரதாபன் எழுந்து நின்றான்.

அதற்குள் அந்த பேக்கில் இருந்த பாராசூட்டை எடுத்து அணிய சொல்லி இருவருக்கும் கொடுத்தான் கார்த்திக்.

இரண்டு பேரும் தப்பித்தாலும் நீ இங்கே தான இருப்ப ராகவ்... இல்லை இல்லை கார்த்திக்..

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.