(Reading time: 9 - 17 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

எனக்கு துணையாக வாழ்க்கை முழுவதும் நீ என்கூட தான் இருக்க வேண்டும் என்று சொல்லி நக்கலாக சிரிக்க கார்த்திக்கோ உள்ளே இருந்து மூன்றாவது பாராசூட்டை எடுத்தான்.

அதைப் பார்த்ததும் பிரதாபனின் கேலி சிரிப்பு மறைந்து சப்தநாடியும் ஒடுங்கியது. மூன்றாவது பாராசூட் எப்படி வந்தது என்று தெரிய பிரசாத்தை பார்த்தான்.

கடைசி நேரத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் மூன்றாவது இருப்பது உதவும் என்று எடுத்து வந்தேன். ஆனால் இப்படி நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை என்ற பிரசாத் தரையில் அமர்ந்து விட்டான்.

ஆனால் பிரதாபனோ... ஏய் கார்த்திக் உன்னோட குயிலி அப்புறம் அவளுக்கு உதவி செய்த ஆசிர்வாதம் இருவரும் என் கஸ்டடியில் தான் இருக்கிறார்கள். நான் போகாமல் அவர்களை அனுப்ப மாட்டார்கள். இனி நீ அவளை பார்க்க முடியாது. நீ மட்டும் தப்பித்து வெளியே சென்றது தெரிந்ததும் அவள் கதையை முடித்து விடுவார்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்தான் பிரதாபன்.

நன்றாக சிரித்து கொள்... உன்னுடைய கடைசி சிரிப்பு இதுவாக தான் இருக்கும் என்று பதட்டமில்லாமல் சொல்லிய கார்த்திக்கை விநோதமாக பார்த்தான்.

ஹலோ மிஸ்டர்... நான் ராகவ் இல்லை கார்த்திக் என்று தெரிந்ததோ அப்போதே எல்லா திட்டமும் தீட்டி விட்டேன். நாம் இங்கு வந்தது உன் திட்டம் இல்லை. என் திட்டம். குயிலி ஆசிர்வாதம் தாத்தா அப்புறம் என் அப்பா எல்லாரும் என் கன்ட்ரோல்ல பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் உன் சத்யா தான் பாவம் என்றான் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு.

எ... எ..... எ... என் சத்...சத்... சத்யாக்கு என்ன ஆச்சு... அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் உன்னை சும்மா விட மாட்டேன்...

ஐயோ பாவம் நீ...‌ பொறியில் சிக்கிய எலி நீ... உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நாம் பெர்முடா முக்கோணத்தை அடைந்த அடுத்த நொடி மும்பை போலீஸ் உன் சத்யாவை கைது செய்து இருக்கும். நீங்கள் செய்ய எல்லா திருட்டுத்தனத்தையும் ஏற்கனவே வீடியோவோட கொடுத்து விட்டேன். அங்கு எங்கள் வருகைக்கு போலீஸ் காத்து கொண்டு இருப்பார்கள். அது மட்டுமல்ல நாங்கள் நேராக எங்க போகப்போகிறோம் தெரியுமா... இவங்க இரண்டு பேரும் செய்த அந்த ரிசர்ச்க்கான அவார்ட் வாங்க தான்.

ராணுவ ரகசியம் மட்டும் அல்ல... விவசாயம் பற்றிய ஃபார்முலாவும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டேன் ‌அத்தை மாமா பெயரில். அவர்கள் நினைத்ததை நாங்கள் சாதித்து விட்டோம்... இனி எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி தான்... நீங்கள் இங்கே இருந்து என்ன

11 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.