(Reading time: 5 - 10 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

சொல்றேன்!...அன்னிக்கு மட்டும் உங்க மகள் பேங்கிற்கு வந்து அந்த பிரபாகரோட உண்மையான முகத்தை எனக்கு அடையாளம் காட்டலேன்னா...நிச்சயம் நான் அவனால ஏமாற்றப்பட்டு பெரிய விபரீதத்திற்குப் போயிருப்பேன்!...இப்ப நான் சுதாரிச்சுக்கிட்டேன்!...அவன் என்னைத் தூக்கி வீசின மாதிரி நானும் அவனையும்...அவனோட துப்புக் கெட்ட காதலையும் தூக்கி வீசிட்டேன்!” என்று சொல்லி முடித்து விட்டுக் கண் கலங்க,

சுலோச்சனா நெகிழ்ந்து போனாள். “எனக்கு ஏற்பட்ட அவமானத்தை தனக்கு ஏற்பட்ட அவமானமாய் நினைச்சு அவனிடம் போய் சண்டை போட்டுட்டு வந்ததோட இல்லாம...ஒரு பாழும் கிணத்துல விழ இருந்த ஒரு அப்பாவிப் பெண்ணையும் காப்பாற்றிய என் தங்கையை நான் தப்பா நெனச்சு...அவ கூட முகம் குடுத்துக் கூடப் பேசாம இருந்திட்டேனே?”

ஓடிப் போய் அர்ச்சனாவைக் கட்டிக் கொண்டு சுலோச்சனா குமுற,

தேவநாதனும், பார்வதியும் ஒருவரையொருவர் தர்மசங்கடத்துடன் பார்த்துக் கொண்டனர்.

“இங்க பாருங்க...நீங்க உங்க அர்ச்சனாவை ஒரு சண்டைக்காரியாகவும்...பஜாரியாகவும்தான் பார்க்கறீங்க!...அவ எப்போதும் நியாயத்துக்காகத்தான் சண்டை போடுவா!...அநியாயத்தைக் கண்டால்தான் பஜாரி ஆவா!...ஸோ..உங்க மனசுல இருக்கற உங்க மகளைப் பற்றிய தப்பான அபிப்ராயத்தை உடனே மாத்திக்கங்க!...அவ மென்மையானவ...தன்மையானவ...பெண்மைக்கே பெருமை சேர்ப்பவ!” சவிதா சொல்லச் சொல்ல,

தேவநாதன் தன் கையை நீட்டி அர்ச்சனாவை அருகில் அழைத்தார், கண்களில் திரண்டு நின்ற கண்ணீர்த் துளிகளோடு அவள் அவரிடம் செல்ல அவள் தலையைத் தடவிக் கொடுத்தவர், “என்னை மன்னிச்சிடும்மா!” என்றார் தணிவான குரலில்.

அப்போது வெளியே வீட்டு ஓனர் சம்பூர்ணத்தின் குரல் ஓங்கி ஒலிக்க, எல்லோரும் “கப்”பென்று அமைதியாகி அதைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

“வண்டியைக் கொண்டு வந்து நிறுத்துறவங்களுக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டாமா?...இப்படி வழி மேலே நிறுத்தி வெச்சா...மத்தவங்கெல்லாம் எப்படிப் போவாங்க?...வருவாங்க?”

அப்போதுதான் சவிதாவிற்கு ஞாபகம் வந்தது, தான் தன் ஸ்கூட்டியை முன்னால் நிறுத்தி விட்டு வந்தது. “அய்யய்யோ...நாந்தான் என் ஸ்கூட்டியை நிறுத்தியிருக்கேன்!” என்று அவள் பதட்டமாய்ச் சொல்ல,

“நீ இங்கியே இரு...நான் போய் எடுத்துத் தள்ளி வெச்சிட்டு வர்றேன்!” சொல்லியபடியே வெளியே ஓடினாள் அர்ச்சனா.

அர்ச்சனாவைப் பார்த்ததும் சம்பூர்ணம் மேற்கொண்டு பேச வாயெழாமல் நிற்க, அமைதியாய்ச் சென்று ஸ்கூட்டியைத் தள்ளிக் கொண்டு போய் தெருவில் நிறுத்தினாள் அர்ச்சனா.

“க்கும்...இதெல்லாம் மொதல்லியே தெரியணும்!” என்று எங்கோ பார்த்துச் சொல்லி விட்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.