(Reading time: 14 - 27 minutes)
Ondru serntha anbu maarumo
Ondru serntha anbu maarumo

இருப்பதினால் கொஞ்சமாவது உலகத்தில் மழை பெய்கிறது என்று மனதில் நினைத்து கொண்டான். ஆதியின் மனதில் அபியின் தாய் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தார். 

மருத்துவ அறையின் உள்ளே இருந்தவர்கள் வெளியில் வந்ததும் பார்வதி அம்மாள் ஆதி அபி மூவரும் அறையினுள் செல்லுமாறு ஆயா கூறினார்.

மே ஐ காமின்???? என்று கதவை தட்டி கொண்டு ஆதி அறையினுள் நுழைய

அதுவரை எதையோ எழுதி கொண்டு இருந்த ஈஸ்வரியின் சப்த நாடியும் ஒரு நொடி நின்றது போல இருந்தது.

இது ........இந்த குரல் ..... என்று தலையை நிமிர்த்த.... அதே நேரம் ஆதியும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான். அவனது கண்கள் கொலை வெறியில் சிவந்து இருந்தன.

ஏக்கம், தவிப்பு,காதல்,அழுகை,சந்தோசம் என அனைத்தையும் ஈஸ்வரி ஒரேயே நேரத்தில் உணர்ந்தாள். அதும், ஆதியின் கழுத்தில் கை போட்டு கொண்டு இருக்கும் அபியை பார்க்கையில் ஈஸ்வரிக்கு சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் மகளின் எத்தனை வருட காத்திருப்பு இன்று நடந்து விட்டதா.... அவளால் நம்ப முடிய வில்லை.

இவர்களது நிலை இப்படி இருக்க பார்வதி அம்மாவோ கண்டேன் சீதையை என்ற நிலையில் இருந்தார். அபி இவளை அம்மா என்கிறாள் அப்படியானால், அபி என் பேத்தியா???? கடைசியில் ஜோசியர் கூறியது உண்மை ஆகிவிட்டதா???? என் மகன் எப்படி இதை மறைத்தான் என்று ஆதியை பார்க்க அவனோ சீலையென அகிலாவை வெறித்து  பார்த்து கொண்டு இருந்தான்.

அவனது கழுத்தை கட்டி கொண்டு அபி ஏதோ கூறி சிரித்து கொண்டு இருந்தாள். இருவரையும் வெகு அருகில் பார்க்கும் போது தான் அபியின் கன்னத்தில் விழும் குழி அதியிடம் இருந்து வந்து இருப்பது பார்வதி அம்மாளுக்கு புரிந்தது.அப்பா வும்' பொண்ணும் ஒன்று போல இருப்பது இப்போது தான் உரைத்தது. 

ஆதியின் கன்னத்தை சுற்றி இருந்த தாடி பார்வதி அம்மாளுக்கு பல ஒற்றுமைகளை மறைத்து இருந்தது.

ஈஸ்வரிக்கோ..... ஓடிச்சென்று ஆதியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழ வேண்டும் போல இருந்தது. அவனை நோக்கி ஓடிய கால்களை கஷ்டப்பட்டு தடுத்து கொண்டு இருந்தாள்.

அவளது மனது அனைத்தையும் மறந்து விட்டாயா???? அவசரப்படத்தேயே..... உன்னால் ஆதி அனுபவித்தது போதும்..... உன் குழந்தைக்கு ஒரு தாயாக இருந்து யோசி.... உன் கணவன் மற்றும் குழந்தையின் உயிர் இப்போது உன் கையில் உள்ளது மறந்து விடாதயே என்றது.

''நீ போம்மா ..... போய்டு என் குடும்ப வாரிசை காப்பாத்து.... என்னை பற்றி கவலை படதேயே

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.