(Reading time: 10 - 19 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

    இதில் ஒரு நல்ல விஷயம் என்னன்னா ப்ரியாவோட அப்பா சொந்தக்காரர்கள் யாருக்குமே அவ்வளவு படிப்பறிவு கிடையாது. அதிகப்பட்சம் கல்வி அளவே பன்னிரண்டாம் வகுப்பு தான் அதுவும் தமிழ் மீடியம்.

     அந்த சொத்து பத்திரம் நகல் ஆங்கில எழுத்துக்களில் இருந்தது. அதை எடுத்து அவர்களால் பார்க்க மட்டுமே முடிந்தது. அருணா எனும் சித்தி அந்த சொத்து பத்திரத்தை வாங்கி அதில் கதிரேசன் என்ற பெயரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அதை வைத்து முடிவு செய்தவர். ஆமா மதனி இதில அப்படித்தான் போட்டு இருக்கு என்று கூறினாள்.

   சரிங்க உங்க எல்லாருடைய டவுட் க்ளியர் ஆச்சா. நான் கிளம்புறேன் கதிர். உங்களுக்கு ஏத்த மாதிரி பத்திரத்தை ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன் வந்து சைன் பண்ணிடுங்க. பிரியா நான் கிளம்புறேன்மா...

     ஓகே அங்கிள்.

ஓகே சார். நாளைக்குஎனக்கும் பிரியதர்ஷினி க்கும் கல்யாணம் வந்துருங்க சார்.

  கண்டிப்பாக கதிர் கால் பண்ணுங்க.

ஓகே சார்.

வக்கீல் விடை பெற்றவுடன் இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நம்புறேன். நாளைக்கு வர உங்களுக்கு டைம் பிரியதர்ஷினி நாளைக்கு என் கூட கல்யாணம் பண்ண சம்மதம்னா ரெடியாயிருங்க. அப்படியில்லை இவங்களோட சேர்ந்து நீங்களும் வீட்டை காலி பண்ணுங்க பாய்...என்று கதிரும் விருட்டென்ற நடையுடன் கிளம்பிவிட்டான்.

வீட்டிலிருந்து அனைவரது முகமும் தீவிர யோசனையை தத்தெடுத்திருந்தது. அவர்களது முகத்தை கண்டவள் அமைதியான நடையுடன் தன் அறையை அடைந்தாள்.

         நுழைந்தவுடன் அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.வாயை தன்இருக்கைகளால் மூடிக்கொண்டு கண்ணில் நீர் வரும் வரை சிரித்தாள். மனதில் நிம்மதி பரவ டேபிள் மேல் உள்ள தன்னுடைய அன்னையின் புகைப்படத்தினை எடுத்து நெஞ்சோடு அணைத்துகொண்டாள். தன் அன்னையே கதிர் உருவத்தில் வந்து தன்னைக் காப்பாற்றியது போன்றதொரு பிரம்மை அவளுக்கு.

       அங்கு கதிரும் அவன் நண்பனும் சிறிது தூரம் சென்றவுடன் பைக்கை நிறுத்த சொல்லி விட்டு வயிரை பிடித்துக்கொண்டு சிரிசிரி என்று சிரித்து விட்டனர்.

      ஓரளவு சிரிப்பு அடங்கிய பின் வக்கீல் மச்சான் கலக்கிட்டடா இந்த மாதிரி சட்டம் எல்லாம் இருக்குன்னு எனக்கே தெரியல பார்த்துக்கோ...

     மச்சி எனக்கு மட்டும் தெரியுமா என்ன நானே ஒரு ஃப்ளோல அடிச்சு விட்டேன். ஆனா

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.