(Reading time: 10 - 19 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

இருக்க மாட்டாள். நாம்தான் பேசி சமாதானம் செய்து அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்தான்.

அவன் ஃப்ரீஸ் ஆகி நிற்பதை பார்த்து என்ன கதிர் அவ்வளவு கேவலமாவா இருக்கேன்.

ஏங்க ஏஞ்சல் மாதிரி இருக்கீங்க. சான்சே இல்லங்க அவ்ளோ அழகா இருக்கிங்க.

அப்படியா நம்பிட்டேன் நம்பிட்டேன்.

ஏங்க உண்மைதாங்க.

சரிங்க என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க.

தர்ஷினி இங்க வந்து உட்காறிங்களா....

ம்ம்....சொல்லுங்க கதிர்.

உங்களுக்கு ஓகேவா. நான் நேத்து அவுங்க முன்னாடி சொன்னதுக்கு நீங்க உண்மையாவே ரெடியாகி நிக்கிறீங்க.

ஓ.....அப்போ அது உண்மை இல்லையா.... சரி நான் போய் புடவைய மாத்திட்டு வரேன்.

இல்லங்க.... அது... அதுவந்து... என்று அவன் திக்கித் திணற,

அவனைப் பார்த்து அழகாக சிரித்தவள்.எனக்கு உங்களை கல்யாணம் பண்ண டபுள் ஓகே கதிர்.

அவன் கண்கள் ஆச்சரியமாக அவளை நோக்க.....

எனக்குத் தெரியும் நீங்க இவ்ளோ சீக்கிரம்  வருவீங்கன்னு. உங்களுக்கு ஒரு ஷாக்  கொடுக்க தான் உங்களுக்கு முன்னாடியே நான் ரெடியாகிட்டேன்.

இல்ல நான் நெனச்சேன் உங்கள சமாதானம் பண்ணிதான் கூட்டி போகணும்னு.

இப்பக்கூட என்ன சமாதானம் பண்ணலாம் கதிர். நான் ரெடி கம் ஆன்.

ஏங்க என்ன கலாய்க்கிறிங்களா.....

பரவாலயே கதிர் சீக்கிரம் கண்டுபுடிச்சிட்டிங்களே....

அவன் அவளைச் செல்லமாக முறைக்க....

கதிர் அருகில் அமர்ந்தவாறு அவனுடைய கை மேல் கை வைத்து, கதிர் இப்பவும் எனக்கு காதல் கல்யாணம் எதிலயும் இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா உங்க கூட இருந்தா சந்தோஷமா இருப்பேன் தோணுது. இப்ப இல்லன்னாலும் ஃப்யூச்சர்ல  உங்க மேல காதல் வரலாம் வராமலும் போகலாம். ஆனா உங்கள இப்ப கைபிடிச்ச  நான் எப்பவுமே விட மாட்டேன்.நீங்கலா என்னை விட்டு போறவரைக்கும். அது மாதிரி உங்களை புடிக்காம நா ஒன்னும் கல்யாணம் பண்ணல கதிர். உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . ஆனா இது காதல் இல்ல வெறும் அன்பு மட்டும்தான். ஆனா இது கூடிய சீக்கிரம் காதலா மாறும்னு மனசு சொல்லுது  அன்னைக்கு உங்ககிட்ட நான் கண்டிப்பா சொல்வேன்.

அவன் தலையை சொரிந்து கொண்டே இப்ப தான் காதல் வரும் வராதுனு சொன்னீங்க. இப்ப

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.