(Reading time: 13 - 25 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

அமரச் சொல்ல

       அவரோ உடனே அமராமல் அந்த அறையை பல வித கோணங்களில் நோட்டம் போட்டார்.  பிறகு அவராகவே வந்து அமர்ந்து 

       “அதுதான் உங்க அட்மினிஸ்ரேஷன் மேனேஜரோட மேசையா?” என்று அந்த இன்னொரு மேசையைக் காட்டிக் கேட்டார்.

       அப்போது அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த இளம்பெண்  நடிகை சோனியா அகர்வாலின் தங்கை போலிருந்தாள்.  சாம்பசிவத்தைப் பார்த்ததும் குட் மார்னிங் சார்!என்றவள் ஏ.சி.தீனதயாளைப் பார்த்து தயக்கத்துடன் ஒரு கையால் விஷ்செய்தாள்.

       “இவங்கதான் சார்...கல்பனா!...இவங்கதான் இந்தக் காம்ப்ளக்ஸோட ஃபுல் இன் சார்ஜ்என்றார் சாம்பசிவம்.

       “ம்ம்ம்...மேடம்..இன்னிக்கு இங்க ஒரு இன்சிடெண்ட் நடந்திடுச்சு...அது பத்தி உங்களுக்கு தகவல் ஏதாச்சும் வந்திச்சா?”

       “இல்லை சார்!..இப்ப வரும் போதுதான்...வெளிய சொன்னாங்க!என்றாள் அவள் அழகாய் விழிகளை விரித்துக் கொண்டு

       “வாட்?..நீங்க இங்க அட்மினிஸ்ட்ரேஷன் பார்க்கறீங்க...உங்களுக்கே தகவல் சொல்லலைன்னா எப்படி?” ஏ.சி.கொக்கி போட

       “இல்லை சார்...மார்னிங் டைம்ல நான் அவசர அவசரமாக் கிளம்பிட்டிருப்பேன்...ஸோ...அந்த டைம்ல எனக்கு போன் பண்ணக் கூடாதுன்னு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்திருக்கேன்...ஒருவேளை..அதனால எனக்குச் சொல்லாம விட்டிருப்பாங்க!

       “இட்ஸ் ஓ.கே!என்ற ஏ.சிஅந்தக் கல்பனாவின் முகத்தை ஊடுருவிப் பார்த்தவாறே ம்ம்ம்..இதுக்கு முன்னாடியும் இங்க இந்த மாதிரி இன்சிடெண்டுகள் நடந்திருக்கறதா பக்கத்து பில்டிங் செக்யூரிட்டி சொல்றாரே...அது நிஜமா?” என்று தணிவான குரலில் கேட்டார்.

       “வந்து...ஒரே ஒரு தடவை...ஒரு செக்யூரிட்டி வாட்டர் டேங்க்ல தவறி விழுந்து இறந்தார்...அவ்வளவுதான்!...அது ப்யூர்லி ஆக்ஸிடெண்ட் சார்!

       “அப்படின்னா...இது?” கொக்கி மீண்டும் போடப்பட

       திணறிப் போன அந்தப் பெண் சட்டென்று சுதாரித்துக் கொண்டு மே பி...இதுவும் கூட ஒரு ஆக்ஸிடெண்ட்டுதான்!

       புன்னகைத்த ஏ.சி ஒரு செக்யூரிட்டி...பைத்தியமாகி விட்டதா சொன்னாங்களே?”

       “அது...அவரோட ஃபேமிலி ப்ராப்ளத்தினால ஏற்பட்ட ஸ்ட்ரஸ்...அதுக்கும் இந்தக் காம்ப்ளக்ஸுக்கும் எந்தவித சம்மந்தமுமில்லை சார்!என்றாள் அந்தக் கல்பனா.

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.