(Reading time: 13 - 25 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

அண்ணாஎங்களைக் காப்பாத்துண்ணாகதறினாள் விசாலாட்சி.

       “சார்எதுக்கு என் தங்கச்சிய இங்க கூட்டியாந்து உட்கார வெச்சிருக்கீங்க?” மிரட்டும் பாவனையில் கேட்ட அவனை அலட்சியமாகப் பார;த்த அந்த போலீஸ்காரர்

       “சொல்லும்மா..நீயே சொல்லுஎன்ன நடந்ததுன்னு நீயே சொல்லுஎன்றார்.

       “அண்ணாநாங்க வேலை பார்க்கற ஜவுளிக்கடைல கல்லாவுல இருந்த ஐயாயிரத்தக் காணோமாம்….மொதலாளி போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்திருக்கார்அதோட அந்த சமயத்துல நாங்க ரெண்டு பேரும்தான் கடைல இருந்தோம்!ன்னும் சொல்லியிருக்கார்…..அதனால எங்க மேல சந்தேகப்பட்டு இங்க கூட்டிட்டு வந்திட்டாங்கசொல்லும் போதே அழுது விட்டாள் விசாலாட்சி.

       “அப்ப விசாரிச்சுட்டு உடனே அனுப்ப வேண்டியதுதானே?”

       “ம்அதுக்கு இன்ஸ்பெக்டர் வரணுமே…” என்றார் அந்தப் போலீஸ்காரர் பென்சிலால் காதைக் குடைந்தவாறே.

       “அப்படியா?..அப்ப சரி..நான் இவங்க ரெண்டு பேரையும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்இன்ஸ்பெக்டர் வந்ததும் வந்து சொல்லுங்க திரும்பக் கூட்டியாறேன்என்றான் விசாலாட்சியின் அண்ணன்.

       அந்தப் போலீஸ்காரர் அதற்கு மறுப்புத் தொpவித்தபடியே வெளியே செல்ல அவரைத் தொடர்ந்து சென்றான் விசாலாட்சியின் அண்ணன்.  சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவனுடன் விசாலாட்சி மட்டும் அனுப்பப்பட அழுகை பீறிட்டது மகேஸ்வரிக்கு.

       மணி எட்டு….ஒன்பது….பத்தாகியும் இன்ஸ்பெக்டர் வராது போக கலவரமாகிப் போன மகேஸ்வரிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாய் அந்த பெண் போலீஸ்

       “எழுந்திரிம்மா போகலாம்இன்ஸ்பெக்டர் வரலையாம்இப்பத்தான் போன் வந்ததுஉனக்காகத்தான் நானும் இத்தனை நேரம் இருக்க வேண்டியதாப் போச்சு”  தன் ஸ்கூட்டியில் மகேஸ்வரியை அவள் வீட்டிற்கே கொண்டு போய் விட்டு விட்டுச் சென்றாள் அந்தப் பெண் போலீஸ்.

       “உள்ளார வராதடி சனியனேசித்தியின் அடித் தொண்டைக் கத்தலைக் கேட்டு மிரண்டு போய் வாசல்படியிலேயே நின்றாள் மகேஸ்வரி.

       அக்கம்பக்கத்து வீடுகளின் ஜன்னல்களும் கதவுகளும் அந்தக் கத்தலில் திறந்து கொண்டன.

       “சித்திஎன்ன சொல்லறீங்க?” அழுதவாறே கேட்டாள் மகேஸ்வரி.

       “கெட்டுப் போனவளை வீட்டுக்குள்ளார சேர;த்துக்க நாங்க என்ன எதுவுமில்லாதவங்களா?…எங்களுக்கும் மானம் மரியாதை கவுரவம் இருக்குடிசண்டைக்  

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.