(Reading time: 13 - 25 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

      

       வீட்டிற்கு வெளியே வந்த மகேஸ்வரியின் சித்தி மாலையும் கழுத்துமாய் நிற்கும் மகேஸ்வரியையும் இன்ஸ்பெக்டரையும் பார்த்து அதிர்ந்து போய்  

       “இந்த அநியாயத்தைக் கேட்க யாருமில்லையா?” என்று கத்த தெருவே கூடி விட்டது.

       “ச்சேசத்தம் போடறதைக் கொஞ்சம் நிறுத்துதனது கம்பீரக் குரலில் இன்ஸ்பெக்டர் தீனதயாள் அதட்ட சட்டென்று அமைதியானாள் அவள்.

       “போலீஸ் ஸ்டேஷன்னா கற்பழிக்கற இடம்ன்!னும்..போலீஸ்காரங்க எல்லாருமே காமுகர்கள்!ன்னும்  நெனச்சிட்டிருக்கீங்களே அதை இன்னியோட மாத்திக்கங்கஎங்கேயோஎப்பவோ..நடந்த ஒரு தப்பை வெச்சுக்கிட்டு ஒட்டு மொத்தமா எல்லாப் போலீஸ்காரங்களையும் தப்பா நெனைக்காதீங்கஇதோகெட்டுப் போகாத இந்தப் பொண்ணை கெட்டுப் போனவள்ன்னு கதை கட்டி அவளை தற்கொலை வரைக்கும் கொண்டு போயிட்டீங்க..அந்தப் பொண்ணைத் தடுத்து அவளுக்கு வாழ்வு கொடுத்த நான் கூட ஒரு போலீஸ்காரன்தான்இனிமேலாவது போலீஸ்காரங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க!ன்னு சொல்லுங்க..என்ற இன்ஸ்பெக்டர் தீனதயாள் சட்டென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தின் பக்கம் திரும்பி

       “ஏம்ப்பா இந்தப் பொம்பளைதான் இல்லாததையும் சொல்லிட்டுத் திரியதுன்னா கேட்கற உங்களுக்கெல்லாம் கூட அறிவில்லையா?”

       கூட்டத்தினர் தலை குனிந்தவாறே நகரத் துவங்கினர்.

       “அம்மா தாயேநாங்க வர்றோம்அடிக்கடி சந்திப்போம்என்று கிண்டலாய்ச் சொல்லியபடி இன்ஸ்பெக்டர் தீனதயாள் பைக்கை கிளப்ப பெருமையுடன் ஏறி அமர்ந்தாள் மகேஸ்வரி.

       அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மகேஸ்வரியின் சித்தி யோசித்தாள்,

       “இந்த இன்ஸ்பெக்டா; முகம் எங்கியோ பார்த்த மாதிரியே இருக்கேமூளையில் சட்டென்று ஒரு ப்ளாஷ் அடிக்க,  வேகமாகச் சென்று பெட்டியைத் திறந்து புரோக்கர் கொடுத்திருந்த அந்த ஜாதகத்தையும் போட்டோவையும் எடுத்துப் பார்த்து அதிர்ந்தாள்.

       போட்டோவிலிருந்தது இன்ஸ்பெக்டர் தீனதயாள்.

       “அடப்பாவமேஇந்த மாப்பிள்ளையை எம்பொண்ணுக்கு முடிச்சுடலாம்ன்னுதான் இந்தச் சனியனையே வீட்டை விட்டுத் துரத்தினேன்கடைசில அந்த மாப்பிள்ளை அவளுக்குக் கெடைக்கறதுக்கு நானே காரணமாயிட்டேனேதனக்குத்தானே புலம்பினாள்.

       “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்றுகடவுள் அமைத்து

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.