(Reading time: 11 - 21 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

     ப்ளீஸ் கதிர்.... என்று அவள் இறைஞ்ச ..

     நீங்களே குத்தகலாம்ல - ங்க.....

நானே குத்திகலாம் தான் ஆனா கண்ணாடி இல்ல கதிர். வீட்ல கண்ணாடி பார்த்து தான் குத்துவேன். என்று அவள் சிரியாமல் அவனிடம் வம்பிழுக்க.....

    அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இரண்டு கையையும் பிசைந்த படியே நின்றான்.

   கொஞ்சம் திரும்பிறிங்களா கதிர் என்று அவள் அழுத்தமாக கூற,

    வேறு வழி இல்லாமல் ஒருவித சங்கடத்துடன் திரும்பியவன். சரி பின் குடுங்க என்று குனிந்த தலை நிமராமல் கையை நீட்ட.....

      இந்தாங்க கதிர் கொஞ்சம் கிட்ட வாங்க....

   அவன் ஒரு அடி நகர்ந்து கையை நீட்ட...

இன்னும் கொஞ்சம்......

 திரும்பவும் ஒரு அடி நகர்ந்தான்.

இது சரிவராது என்று நினைத்தவள். அந்த சேஃப்டி பின்னினால் அவன் நீட்டிய கையில் குத்த.....

     ஆஆ.... என்ற சத்ததுடன் கையை இழுத்துக்கொண்டு அவளை பார்த்தான்.

    அவள் கேலி சிரிப்புடன் ஒரு புருவத்தினை ஏற்றி இறக்கி என்ன என்பது போல் பார்த்தாள்.

    அவன் மறுபடியும் தலையை குனிந்து கொண்டான்.

    உஸ்ஸ்........ என்று பெருமூச்சு விட்டவள். அவன் அருகில் சென்று குனிந்திருந்த அவன் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தினாள்.

    சாரி கதிர் கதவு சாத்திருக்குனு நினைச்சிட்டேன். இனிமே கேர்ஃபுல்லா இருக்கேன்.

   அவன் தலையை மட்டும் ஆட்டினான்.

   ஆனா நீங்க ஏன் இப்புடி இருக்கீங்க..... உங்க பொண்டாட்டிய தான பார்த்திங்க.

உங்களுக்கு ஏங்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு சரியா.....

    அவன் இதற்கும் தலையினை மட்டும் ஆட்டினான்.

    தன் கணவனின் சுபாவத்தை புரிந்தவள். சின்ன சிரிப்புடன் நீங்க டிரஸ் சேன்ஜ் பண்ணுக என்று வெளியே சென்று விட்டாள்.

     அவள் வெளியே சென்றவுடன் தான் அவனுடைய மூச்சே சீரானது.

     மணி ஆறு ஆகி விட்டது. வெளியே வந்து பார்த்தவள் அனைவரும் அதே நிலையில் உறங்கிக் கொண்டிருக்க மாமனாரை மட்டும் காணவில்லை.

26 comments

  • Thank u so so much sir. Na avlo periya writer lam ela sir. Na oru kathukutty na elutha arambichu two years tha aguthu sir. Ungaludaya anupavam vaintha eluthuku munadi na elam onume ela sir. Neenga enoda story virumbi padipathu happy sir.
  • Good morning, dear Dhanu! எனக்கு முன்பே 421 பேர் படிச்சிட்டாங்களேன்னு கோபமாக, படித்தேன், ரொமாண்டிக் பகுதி என்னை சமாதானப்படுத்தியது. சினிமாவிலே வருகிறமாதிரி, யதார்த்தமாக இருந்தது! கதை குடும்பப்ஆங்காக மாறுகிறது! வெளுத்து வாங்குங்க!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.